6 அரிய செய்திகளைத் தெரிவித்தும் யான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு ஒல்லும் வகையால் உதவியும் பல நண்பர்கள் இந்நூலை உருவாக்கத் துணை புரிந்துள்ளனர். அவர்களின் பெயர்ப் பட்டியலை, நூலின் இறுதியில் தந்திருக்கிறேன். அவர்களுடைய பேரன்புக்கு என் நன்றி உரியது. என் இனிய நண்பரும் இராமநாதபுர மாவட்டத்துத் தனி டெப்டி கலெக்டராக மதுரையில் பணியாற்றி வருபவர்களுமாகிய உயர்திரு. எஸ். இராமச்சந்திரப் பத்தர் அவர்கள் இந் நூலுக்கு ஒரு சிறப்புரையை அன்புடன் அளித்துள்ளார்கள். இவர்கள் சிறந்த தாய் மொழிப் பற்றும், ஆழ்ந்த இலக்கண இலக்கியப் புலமை யும், பேச்சு வன்மையும், எழுதும் திறனும், நல்லியல்பு களும் நிரம்பப் பெற்றவர்கள்; தஞ்சை மாவட்டத்தினர். அம் மாவட்டத்திலேயே அரசாங்க அலுவல்கள் பலவற் றில் பல்லாண்டுகளாகப் பணி புரிந்தவர்கள்; சிறு தொழில்கள் அம்மாவட்டத்தில் பெருகவும் தஞ்சைக் கலைக்கூடம் அமையவும் அரும்பாடு பட்டவர்கள். அன்னாருடைய அருமையான சிறப்புரை இந் நூலை அணி செய்வது எனக்குப் பெருமகிழ்வு தருகிறது. சென்னை 23-11-1961 } 'சோமலெ'
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/6
Appearance