பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

127


முனிவருக்கும் பிரமை ஊட்டக்கூடியதுதான் புகழாசை இன்றைப் பிரசங்கிகள் பலரும் நாயுடுவைப் புகழ்ந்தும் அவருக்குச் சலிப்பு ஏற்படவில்லை.

உட்கார்ந்திருப்பதா எழுந்து போவதா என்று தீர்மானம் செய்து கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நீதிப்தி ஜனார்த்தனராவைப் பார்த்துக் பாகவதர், “அவ்விடத்திலிருந்தும் இரண்டு வார்த்தைகள் வரட்டுமே” என்றார்.

நீதிபதி ஜனார்த்தனராவ் எழுந்து கன்னட ஒசையுடன், பாகவதரு என்னையும் இரண்டு வார்த்தைகள் பிரஸ்தாபிக்க ஆக்ஞாபித்தாரு பரமசந்தோஷமாகுவது, பாகவதரு ரொம்ப ரொம்ப போதனை கொடுத்தாரு. அவருக்கே நம்ம வந்தன சொத்து, படிப்பு, கெளரவ எல்லாம் பூரணமான மனிஷ்யரு தர்மரத்னாகர ரங்கபாஷ்யநாயுடு அவரு. புருஷார்த்தம் எல்லாம் சித்தியாகி இருக்கிற அவருக்கே அரோக திடகாத்திரமுள்ள நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திக்கிறேன்” என்று ரத் தினச் சுருக்கமாகப் பேசி உட்கார்ந்தார். குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர் என்று பிரசித்தி பெற்ற வக்கீல் கனகலிங்கேசுவரய்யா எழுந்ததும் பாகவதர், “நீதிபதி தீர்ப்புக் கூறிய பிறகு வக்கீல்கள் பேசுவது வழக்கமில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னதும் சபையில் கொல்லென்று சிரிப்பொலி உண்டாயிற்று. கனகலிங்கேசுவரய்யாவும் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். பட்டாபிஷேக வைபவம் மங்களமாக முடிந்து தின்பண்டங்களும், சந்தன தாம்பூலமும் வழங்கியதும் கூட்டம் கலைந்தது.

2

மறுநாள் காலை ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. தலை பாரமாக இருந்தது. உளியை வைத்து நெற்றியில் அடிப்பது போலத் தலை வலித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பூட்டுக்குப் பூட்டு ஸ்குரு திருப்பியைக் கொண்டு முடுக்குவது போல வேதனை ஏற்பட்டது. மெல்லத் தட்டுத் தடுமாறி எழுந்து டெலிபோன் அருகில் சென்று டாக்டரை வருமாறு அழைத்தார். எல்லாவிதமான சாதனங்களும் அமைந்திருந்த தம்முடைய விசாலமான அறையை ஒட்டியிருந்த ஸ்னான அறைக்குச் சென்று பல் விளக்கினார். அவரால் நிற்க முடியவில்லை. தள்ளாடிக் கொண்டே மறுபடியும் படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

டாக்டர் வந்த பிறகு தான் ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்தது. டாக்டர் பரிசோதனை செய்தபோது நாயுடுவுக்கு ஜூரம் இருப்பது தெரிந்தது. இருபுறத்து ஈரல்களிலும் கபம்