பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சோலை சுந்தரபெருமாள்


விடுவானுக. பின்னே ஏது இந்த சொத்தெல்லாம்? கலெக்டர், திவான் உத்தியோகம் பார்த்தானுகளா, இல்லே பெரிய வியாபாரம் பண்ணினானுகளா? தொன்றுதொட்டு இது தானே அவர்களுடைய குல தர்மம்.”

“கோபாலய்யர் ஏதோ உத்தியோகம் பார்த்து ‘ரிடையர்’ ஆனவர்தானே?”

“அது தான் சொல்லனும், வந்த புதிதில் அவர் வட்டி வாங்காமல் ஏழைகளுக்குக் கைம்மாறு கொடுத்துக் கொண்டிருந்தார். வரவர, இந்த ஊர் ராட்சஸனுகளைவிட ரொம்ப மேலே போய்விட்டார். என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து குடும்பங்களை நிர்மூலமாக்கியிருக்கிறார் இதுவரை. இன்னும் அவரிடம் கடன்பட்டு வரவே வைக்காத இரண்டு ஜீவன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலையும் சுற்று வாடையும் அவரை...”

“கோபாலய்யரா? அவர் ரொம்ப நல்லவர். ஆசார அனுஷ்டானம் தவறாதவர். நல்ல வம்சத்தில் பிறந்தவர்...”

“வம்சமும் இனமும் என்னப்பா செய்யும்? நான் குரங்கோடு சுற்றுகிறேன். ஏன் தெரியுமா? எல்லோரும்.”

“எல்லோரும் உன்னைப் பைத்தியம் என்று சொல்லத்தான்.”

“அதை நான் லக்ஷ்யமே பண்ணவில்லை. இதை கேள், குரங்கு இனம் சாக பக்ஷி”

“யார் இல்லையென்றது? ஈச்வர சிருட்டியே அப்படி,”

“அதுதான் தப்பு; சிருட்டியில் குணம் கிடையாது. குரங்கும் மாம்ஸி பக்ஷி ஆய்விடும். சூழ்நிலை, திரும்பத் திரும்பச் செய்தல், வெறி இவை போன்ற காரணங்களால்...”

“இது தான் நீ பைத்தியம் பட்டம் வாங்கிக்கொள்ள நடத்திய ஆராய்ச்சியோ?”

“இது ஸத்யம் நாணா, ஊராரைக் கேள், சொல்லுவார்கள்...”

“...இந்தக் குரங்கு எத்தனை நாய்க்குட்டிகளைத் தூக்கிச்சென்று கொன்றிருக்கிறது தெரியுமா? ஆரம்பத்திலே தாய் நாய்கள் குரைத்துத் துரத்தியதால் இதற்கு ஏற்பட்ட கோபவெறியில் குட்டிகளைத் தூக்கிச் சென்றது; கொன்றது; இவ்வளவுதான் ஊராருக்குத் தெரியும். எனக்கு அதுக்கு மேலே தெரியும். குட்டிகளின் கழுத்தை நெறித்துக் கிழித்துக் கையால் குதறி எறியும். கையெல்லாம் ரத்தமாய் விடும். துடைக்கத் தெரியாமல் நக்கும். ரத்தம்-நாக்கில் படும். தணிந்த வெறிக்கும் இந்தச் சுவைக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இது அடிக்கடி ஏற்படுவதால் நினைவில் அழுந்தும். பிறகு அதே செய்கைக்குத் தூண்டும். வெறி வந்தவுடன் நாக்குச் சுவையும் நினைவுக்கு