பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பட்டுள்ளன. ' துணி, நெல், மூங்கில், எருமை, ஆடு, செருப்பு, வண்டி, குதிரை, ஒடு, அரிசி, பயறு, எலுமிச்சை, குஸாம்பி புஷ்பம், எண்ணெய், விறகு, உப்பு, சாராயம், பட்டுநூல், பல்லக்கு, வாழை, பருப்புகள், நெய், மாடுகள், மாமிசம், வரகு வைக்கோல், எள், கோதுமை, வெல்லம், வெங்காயம், துவ்ரை, மொச்சை, போர்வை, மண்வெட்டி, கயிறு, காராமணி, விளாம்பழம், பேரீச்சை, பாக்கு இரும்பு, மஞ்சள், பாய், வெற்றிலை, காய்கறிகட்டு, பிண்ணாக்கு, கொப்பரை, சந்தனக்கட்டை ' என்பன வரிவிதிக்கப்படுவன என்று தெரிகிறது. இவை உள்நாட்டுவரி - ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு எடுத்துச் செல்லுங்கால் விதிக்கப் பெறுவனவாம். இத்தலைப்பில் 1826-27இல் பெற்ற தொகை ரூ. 3,76,395 என்று தெரிகிறது." - 67, 4-260 68. 2-218 முதல் 220 வரை 69. 1-852