பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 தமிழ், தெலுங்கு, மராட்டி, அராபி, பாரசீகம் ஆகிய மொழிகளுடன் ஆங்கிலமும் கற்பிக்க வசதிகள் தோன்றின. சில சத்திரங்களும் இவ்வசதிகளை அளித்தன. படித்தவர்கள் பெரும்பான்மையோர் மேட்டுக்குடி மக்களாகவே இருந்திருத்தல் கூடும். வெள்ளையர் ஏற்படுத்திய கல்வி நிலையங்களும் மக்களது அறியாமை யைப் போக்க உதவின. அடிமைகள் இந்நாட்டில் இல்லாமல் இல்லை. பெரும்பாலும் சிற்றுார் களில் வயல் வெளியில் வேலை செய்தவர்கள் கொத்தடிமைகளாகவே இருந்த னர் என்று தோன்றுகின்றது. பணிப்பெண்களாக வேலை செய்யப் பெண் குழந்தைகளும் விற்கப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. கும்பினியாரும் அடிமை விற்பனையில் ஈடுபட்டனர். உடன்கட்டை ஏறுதல் பரவலாக இருந் தது. அரச குடும்பத்தவரும் பெருந்தனக்காரரும் இப்பழக்கம் உடையராயிருந் தனர். உடன்கட்டையேறும் " மாசத்தி " அணிந்த நகைகள் அங்குப் புரோகிதம் செய்த அந்தணரைச் சாரும் என்ற மேனாட்டார் கூற்று இங்கு நினைவு கூர்தற்குரியது. H இந்நாட்டு மக்களுட் சிலர் பெரிய மிராசுதாரர்களாய் இருந்தனர். எஞ்சிய சிலர் சிறு சிறு நிலப்பகுதியைப் பயிரிட்டு வாழ்ந்தனர். பெரும்பாலான மக்கள் பல்வேறு தொழில்களையும் செய்துவந்தனர். தஞ்சை அரண்மனை யிலிலேயே ஆயிரக்கணக்கானேர் அலுவலர்களாக இருந்தனர்.' அந்நாட்களில் பொருள்களின் விலை மிகவும் குறைவாகவேயிருந்தது. இதற்குக் காரணம் தேவைக்குறைவு என்பது ஒன்று. பிறிதொன்று நாணயங் களின் புழக்கக் குறைவு. நாணயங்கள் பொன் வெள்ளி செம்பால் செய்யப் பெற்றன. அந்நாணயங்களை அச்சிடும் நாணய சாலைகளும் இருந்தன. சிறு சிறு நாட்டுப்பகுதிகளுக்குச் சுயேச்சையான அரசர்கள் இருந்தமையின் தமக்கு வேண்டிய நாணயங்களைத் தாமே அச்சிடலாயினர். ஒரு பகுதியில் அச்சிட்ட நாணயம் இன்னொரு பகுதியிலும் செலாவணியாகும் ; தேய்ந்தால் மதிப்புக்குறையும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி தொடங்கியபொழுது பல்வேறு நாணயங்கள் இருந்தன என்று தெரிய வருகிறது." 1. 7.547 முதல் 557 வரை ; 155 வகைகள் , 3877 பேர் மாதச் சம்பளம் ரூ. 87,562, 2. " An endless variety of coins is now met with in the bazaar throughout India, derived from the right assumed by every petti Raja and local chietains to issue money in his own territory " - P. 60 ; ” The great number and diversity of coins now found in all parts of the country has been accounted for by the right of striking money assumed by so many provincial and even by village authorities in late times " - P. 143, Coins of South India, by Sir Walter Eliot. 2