பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சரஸ்வதி மஹால் நூல் நிலையத்துக்கு பிஷப் ஹீபர் சென்று பார்வை யிட்டபொழுது அங்கு ஒரு புறம் ஷஹாஜி முதல் சிவாஜி வரை ஆண்ட மராட்டிய மன்னர்களின் படங்கள் இருத்தலைக் கண்டதாகத் தம் நாட்குறிப்பில் எழுதி யுள்ளார்." சரஸ்வதி மகாலில் மராட்டிய அரசர் படங்களும் பிற படங்களும் இருந்தமை 26-12-1868க்குரிய ஆவணக்குறிப்பால் அறியவருகிறது." சரஸ்வதி பாண்டாரத்தில் 52 படங்கள் இருந்தன. கிருஷ்ணனின் படங்கள் 8; 20 அரசர்களின் படங்கள் ; 18 அரசமாதேவிகளின் படம் இடபாருட ராகப் பார்வதி பரமேசுவரர் படம் 1; அரச சபை 1 ; சேது கோசுவாமியின் படம் 2; பீரங்கி படம் 1; ஞானேசுவரரின் படம் 1 ; ஆக 52 படங்கள். சிறர் விளங்கிய நூலகம் - மராட்டிய மன்னர்தம் குடும்பத்துக் ApAb35/ அ தம கு ததுககு உரியதாய் இருந்த நூலகம் 5-10-1918இல் விடுக்கப்பட்ட அரசாணையால் ஒரு குழுவினரால் நிர்வகிக்கப் பெறலாயிற்று." 166. The Last Days of Bishop Heber by Thomas Robinson printed & published im 1829. 167. 12.288 168. சரஸ்வதி மகால் . ஆர். ஜெயராமன், பக்கம் 89-92