பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மருந்து அல்லது வைத்தியம் தஞ்சை மராட்டிய மன்னர் சிறந்த படைகளை வைத்திருந்தனர். யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை ஆகிய மூன்றும் சிறந்து இருந்தன. மேலும் தஞ்சையில் இருந்த குதிரைப் படை மிகச்சிறந்து இருந்தது என்றும், இந்தியாவிலேயே தஞ்சையில்தான் குதிரைப் படையை வைத்துப் பேணுவதற்குச் சிறந்த சூழல் இருந்தது என்றும் சொல்லப்பெறுகிறது." தஞ்சை அரண்மனையில் ஒட்டகங்களும் இருந்தன ; மாடுகளும் பசுக்களும் கணக்கிலடங்கா. இவை நோயுறின் நோயைப் போக்க மருத்துவர் பலர் இருந்தனர். மாடு, குதிரை, யானை, ஒட்டகம் முதலியவற்றுக்குத் தனித்தனி மருத்துவர் இருந்தமையோடு, விஷ வைத்தியரும் (விஷத்தைப் போக்கும் மருத்துவரும்) இருந்தனர். தமிழ் மருத்துவர்களும், முஸ்லிம் மருத்துவர் களுடன் மேலை நாட்டு மருத்துவரும் இங்கு வைத்தியம் செய்தனர். இப்பொழுது கிடைத்துள்ள மோடி ஆவண மொழிப்பெயர்ப்புக் குறிப்புக் களில் மிகப் பழமையான வைத்தியக் குறிப்பாக 1797க்குரிய குறிப்பைக் கொள்ளலாம். அக்குறிப்பில்," பீல்கானா - (யானைக்கூடம்) இதில் 52 யானைகள் இறந்து விட்டன. வெங்கடமாவுத்தன் யானை வயித்தியம் அறிந்தவன். ஒவ்வொரு யானைக்கும் 1. " No part of India or perhaps of the world is formed for producing and maintaining an effective body of cavalry than Tanjore ” – Page 18, Memorial of the King of Tanjore to the Directors of the Honourable The East India Company (Booklet found in the University Library, Bombay University). 2. ச. ம. மோ, த. 20-4