பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 மூர்த்தியை ஊர்வலமாகக் கொணரும்பொழுது அரண்மனை மாடியிடம் வருங் கால் தட்சணை ஒரு சக்கரம் அளிக்கப்பெற்றது. அரண்மனையிலும் இந்த நாட்களில் சிறந்த முறையில் பண்டிகை கொண்டாடினர். ' கி. பி. 1786 பூரீராமநவமிக்கு உத்தரவு ; மாதுபூரீ அன்னபூர்ணா பாயி, பவானி பாயி, பார்வதி பாயி-இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவல் 20 படி; பொறி 15 படி ; கடலைப் பருப்பு 5, பயத்தம் பருப்பு 5 ; பொட்டுக் கடலை 5; கசகசா 3; தேங்காய் 25; பழம் 50 ; சூடம் சாம்பிராணி வகையறா கொடுக்க வேண்டியது" - என்ற குறிப்பால்"அ ஒவ்வொரு பாயி சாகேபும் ராமநவமி கொண்டாடினர் என்பது போதரும்க கி. பி. 1824க்குரிய குறிப்பு' சக்வாரம்பா பாயி கோகுலாஷ்டமி பூசை நடத்தியதாகக் கூறுகிறது. காமன் பண்டிகை இது ஹோலி பண்டிகை என்றும் குறிக்கப்படும்." இது ப்ால்குண மாசத்தில் நடத்தப்பெறுவது. "1769 ஸர்க்காரில் காமன் பண்டிகைக்காக வெள்ளிப் பீச்சாங்குழலுக் காகத் தஞ்சாவூர் எடை சேர் 31 க்கு சேர் 1க்கு 19 சக். வீதம் சக். 61-7; ” என்ற குறிப்பால்' இப்பண்டிகையை வெகுவிமரிசையாக நடத்தினர் என்று ஊகிக்கலாம். ஜனவரி பண்டிகை கிருஸ்துமஸ் பண்டிகை, வெள்ளையர் ஆதிக்கம் இந்த நாட்டில் வந்தபிறகு சிறப்பான பண்டிகையாகக் கருதப்பெற்றது. தஞ்சையில் இருந்த வெள்ளையர்கட்கும், சென்னையில் இருந்த கவர்னர் போன்றவர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகள் அளிக்கப்பெற்று வந்தன. மாதிரிக்கு ஒன்று: ஜனவரிப் பண்டிகைக்காக மிஸ்தர் பிளாக்பர்ன்' சாயேபுக்கு இனாம் 500 சக்கரம் ' என்பதால் கிருஸ்துமஸ் பண்டிகையை யொட்டிப் பெரும்பொருள் செலவு செய்யப்பெற்றமை அறியவரும். 40, 4–206 40 அ. 8-28 41. 4-89. 42, "Holi Pandigai is the same as what Tamils call Kaman Pandigail” — p. 188, Deposition of Saminatha Sastrigal, O. S. 26 of 1912. " In Sivangi Pournima we have both Kulatharmam in the morning and “Holi” at night i. e., the burning of Dhoda Rakshasi. It is a 2 day's festival as we do Puja to the ashes the next morning" – Page 19, Deposition of Ghantigai, O.S 26 of 1912. 43. 2–18. 44 2-85. 45. இவர் சரபோஜி II " கைலாசவாசி" ஆனபொழுது ரெஸிடெண்டாக இருந்தவர்.