பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 உடன்கட்டை ஏறியதனால் அவர்களுடைய சிரார்த்தம் செய்வதற்கு மகாராஜா சத்ரபதி தரும பராயணர் கோ பிராம்மண பிரதி பாலகர் தயை யுள்ளவர் ஆகையினால் போன வருவடிம் அதற்கு முன் வருஷம் கோதானம் கொடுத்தது போல் இப்பவும் கொடுக்க வேண்டும்.' '1829 : வண்ணாத்தங்கரை நரசிம்மாச்சாரியார் ஸர்ப்ப தம்ஸ்த்தால் இறந்தார். அவருடைய பாரியை சக கமனம் செய்யச் சக்கரப் 5' " மேற்கண்ட மேற்கோள்களால் அரச குடும்பத்தார் மட்டுமன்றிப் பிற மேல்நிலைப் பெருமக்களும் உடன்கட்டையேறும் வழக்கம் ஒரோவழி உடையராய் இருந்தனர் என்று அறியப்பெறும்.' எனினும் இவ் வழக்கம் மிக அருகியே காணப்படுகிறது. தஞ்சை மராத்திய அரசர் சக கமனம் செய்யும் செய்தியைக் கேட்டதும் (அங்கு நடைபெறும் சடங்குகளின்) செலவுகட்காக 5 சக்கரம் இனாம் கொடுத் தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சக கமனம் அல்லது உடன்கட்டை ஏறுதல் அரிய செயல் ஆகலின் இங்ங்னம் உதவித்தொகை அளித்தனர்போலும். இச்சககமனச் செயலினால் உடன் உயிர் நீக்கும் " மா சத்தி "க்குப் புண்ணியம் இருக்கலாம்; புகழும் இருக்கலாம் ; ( எனினும் அது தற்கொலை தவிர்த்து வேறு எப்பெயராலும் குறிப்பதற்குத் தகுதியுடையதாக இல்லை ). ஆளுல் அப்பொழுது நன்மை பெறுபவர் அங்கு நீத்தார் கடன் செய்விக்கும் புரோகிதனே ஆவன் என்பதை ஸ்வார்ஷ் பாதிரியின் நினைவுக் குறிப்புக் களினின்றறியப்பெறும்." உடன்கட்டையேறும் 'மா சத்தி " அணிந்த நகைகள் எல்லாம் அந்தப் புரோகிதர் அடைவார் என்று குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. இஃது அநாகரீகமான, மனிதப் பண்புக்கு ஒவ்வாத, வன்முறையில் உயிர் போக்கும் செயல் எனக்கருதிச் சென்னை ஆங்கில அரசாங்கத்தார் 1830ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி இதனைத் தடை செய்தனர்." 16. ச. ம. மோ, த. 6-84 17. ச. ம. மோ. க. 4-24 18. " In Tamil Nad royalty and nobility practised it. The Brahmins and the common folk if at all practised it rarely – P. 287, History of Tamil Nad (1565–1956) by N. Subramanian 19. இக்கட்டுரை அடிக்குறிப்பு 6க்கு உரியது காண்க 20. ” The Government of Madras legislated against Sati, by the Madras Regulation of 1830 - P. 288, History of Tamil Nad, N. Subrama nian