பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சென்னைக் கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டன் என்பவரிடத்தில் கொடுத்த II. பிராது 11 ஆகும்." சித்துார் மாவட்டம் வேலூர்க் கோட்டையில் இருந்தவன் சோலையா. இவன் மகன் கும்பகோணம் சபாபதியாபிள்ளை. இவன் கும்பகோணத்தி லிருந்தபோது ஏறத்தாழ 1831இல் திருவையாற்றுக்கு வந்தான். அங்குப் பெரிய நாயக் கொத்தன் என்பவன் கள்ளச் சாதியைச் சேர்ந்தவன் - வேளாளன் என்று கூறிக் கொண்டு, தன் மகள் மீனாட்சி என்பவளைச் சபாபதியா பிள்ளைக்கு மணம் செய்து கொடுப்பதாகக் கூறினான். சபாபதியாபிள்ளை 21 ரூபா பரிசம் கொடுத்து ரூ. 100 வரையில் செலவு செய்து கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாண்டுகள் மாமனார் வீட்டிலேயே இருந்தான். பின்னர் வேலூருக்கு வேலை தேடிச் சென்றான். செல்லுங்கால் தன் மனைவியை உடன் அனுப்புமாறு சொன்னான். அப்பொழுது அந்த மீனாட்சிக்கு வயது ஏழு. ஆகவே அவள் பெரியவள் ஆனபின்பு அனுப்புவதாகப் பெண்ணின் தந்தை கூறினான். சபாபதியாபிள்ளை வேலூரில் 3, ரூ. சம்பளத்தில் அமர்ந்தான். சில ஆண்டுகள் கழிந்தன. திருவையாற்றிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அப்போது கண்டியராஜா அவர்களின் தாய் தஞ்சைக்கு வந்தார். அந்தச் சவாரியில் சபாபதியாபிள்ளை வந்தான்; திருவையாற்றுக்குத் தன் மனைவியை 1842 ஜூலை மாசத்தில் பார்க்கச் சென்றான்; அவள் தஞ்சையில் அரண்மனைக்கு விற்கப்பட்டாள் என்றும், ஆனந்தவல்லி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாள் என்றும் சொல்லப் பெற்றான். ரெஸிடெண்டு N. W. கிஸ்டர்ஸிலி துரையினிடத்தில் ' பிராது." கொடுத்தான். துரை அப்பெண்ணை விடுதலை செய்யாமல் கும்பினிக்குப் பிராது செய்துகொள்ளச் சொன்னார். அதன்படி சென்னைக் கவர்னரிடம் 10-8-1842இல் பிராது கொடுத்தான். 30-8-1842இல் அரசாங்கத்தார். இதில் தலையிடுவதற்கு இல்லை என்று பதில் வந்தது. இச்செய்தியினின்று திருமணம் செய்தவரரய் இருந்தபோதிலும் மைனர் " பெண் ஆகையால் அந்தப் பெண்ணைத் தந்தையானவன் விற்றுவிட்டான். அரசும் தடை செய்யவில்லை என்பது பெறப்படும். 27. 6-888 முதல் 889 முடிய.