பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 "மகாராஜா சபையில் எல்லாச் சேனைகளுடனும் வெள்ளைக்கார ஜனங்கள் உட்கார்ந்து சென்னைப்பட்டணம் கவர்னர் அவர்கள் பட்டம் கட்டும் காகிதம் அனுப்பியதைச் சதசில் படிக்கும்போது கோட்டையின் மேல் 21 துப்பாக்கி சுடப்பட்டது.” "11 நாழிகைக்குப் பிறகு எல்லா சேனைகளுடனும் சிவாஜிராஜா ரெசிடெண்ட் தங்கரதத்தில் உட்கார்ந்து, மேலும் மாப்பிள்ளைகள் 4 பேர் கலெக்டர் வகையறாக்கள் சர்கேல் சிரேஸ்ததார்கள் ஹெளதாவில் உட்கார்ந்து 4 வீதி சுற்றி இரவு 4 நாழிகைக்கு அரண்மனை வந்து சேர்ந்தார்கள். பாவாஜி ராமாஜி பண்டிதர்க்குச் சர்கேல் வேலை உத்தரவிடப்பட்டது. பட்டாபிஷேகச் செலவு நாகப்பட்டினம் கம்பெனி கஜானாவிலிருந்து ரூ. 50,000 வந்தது." 8-3-1832இல் இரண்டாம் சரபோஜி இறந்தபொழுது கும்பினி அரசாங்கத்தார் ஒரு அறிக்கை வெளியிட்டதாகத் தெரிகிறது." இரண்டாம் சிவாஜி இரண்டாம் சரபோஜிக்கும் அவரது இரண்டாவது மனைவி அகல்யா பாயிக்கும் சிவாஜி பிறந்தார். இவர் பிறந்த தேதி கி. பி. 1808இல் பிரபவ மாசி மாதம் 23ஆம் நாள்; மார்ச்சு மாதம் 22ஆம் நாள் சிவாஜி என்று பெயர் சூட்டப் பெற்றார்." செப்டம்பர் 30 அன்னப்பிராசனம், குடுமிக்கல்யாணமும், பள்ளிக் கூடத்தில் வைத்தலும், இடுப்பில் சின்ன கத்தியைக் கட்டுதலும் 1811இல் நடந்தன." "சின்ன மகாராஜா கல்யாணத்துக்காக 1818 ஜூன் 30இல் மேசை பண்ணுகிற படியினாலே" என்ற குறிப்பினால்" சிவாஜிக்கு முதல் திருமணம் 1818இல் நடந்ததாகக் கொள்ளலாம். "1829 ராஜபூரீ சிவாஜி மகாராஜா இரண்டாவது கல்யாணம் ராஜபூநீ ராமச்சந்திர சூர்வே லக்னபத்திரிகை அனுப்புகிறார்" என்ற குறிப்பும்," "... டிை இரண்டாம் கல்யாணம் மாப்பிள்ளை எசவந்தராவ் ராமச்சந்திர ராவ் சூர்வே பெண் காமாட்சிபாயி கலியாணம்" என்ற குறிப்பும்," காமாட்சி அம்பாபாய் இவரது இரண்டாவது மனைவியென்றும், இவர்களது திருமணம் கி. பி. 1829இல் நடந்தது என்றும் அறிய உதவுகின்றன. 98, 6–93 99. 3-225 100. 2-47 101, 6-329 102. ச. ம. மோ த. 4-16 103. ச. ம. மோ. த. 10-15