பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பொது சங்கராசாரியார் விஸ்வரூப யாத்திரை (தலயாத்திரை)யாகச் சென்றால் சென்றவிடமெல்லாம் அவர்க்கு மரியாதை செய்யப்பெறுவதுண்டு. ஆகவே 4-3-1830இல் திருவாரூர்க்குச் சென்றபொழுது செய்தி தெரிவித்த மரியா தையும் பெற்றார்.4 சங்கரமடத்தில் ஏட்டுச்சுவடிகள் வேண்டும் எனில் சரஸ்வதி மகாலில் கேட்டுப் பெறுவதுண்டு" என்றும் தெரிகிறது. அஹோயில மடம் - o ஆழ்வார்திருநகரியில் தோன்றிய வண்சடகோபர் என்பவரால் ஆந்திர நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட மடமே அகோபிலமடம் எனப்பெறும். கும்ப கோணத்துக்கு அருகில் நரசிம்மபுரத்தில் அகோபில மடத்தின் கிளை ஒன்று. இருந்தது. அங்கிருந்த அகோபில மடம் ஆசாரியாருக்கு மராட்டிய அரச்ர்கள் மரியாதை செலுத்தி வந்தனர். ஒர் ஆவணக்குறிப்பு' "அஹோயில ஆசாரியருக்குத் தக்ஷனை சக்கரம் 2000, ரூ.1000" என்றுள்ளது. இதன் காலம் நன்கு தெரியவில்லை. கி. பி. 1801இலிருந்து இரண்டாம் சரபோஜி அவர் மகன் இரண்டாம் சிவாஜி இவ்விருவர் காலங்களில் அகோபில மடத்துத் தொடர்பு இருந்தம்ை நன்கு தெரியவருகிறது. வியாஸ் பூசைக்கு அகோபில மடத்துக்கு மராட்டிய அரசர் நன்கொடை தருவதுண்டு. அந்தப் பூசைக்குத் தருமசபை நியாயாதிபதி. அப்பு ஆசாரி என்பவர் 1801இல் சென்றுவந்ததாக ஓர் ஆவணமும், அவரே 7 பேருடன் 1821இல் சென்றதாகப் பிறிதோர் ஆவணமும்" கூறுதல் காணலாம்: இப்பணிக்கு ரூ.100 கொடுத்தனர்போலும்." அகோபில ஜீயர் சுவாமிகள் தஞ்சைக்கு 1811இல் எழுந்தருளினார்கள். அப்பொழுது கனகாபிஷேகமும் பாதுகை பூசையும் அந்தணர் அன்னம்பாலிப்பும் நிகழ்ந்தன என்று ஓர் ஆவணக்குறிப்பு" உள்ளது. அப்பொழுது செலவு 228 சக்கரம்.

    • = இங்ங்னமே 1829இலும் ஜீயர் அரண்மனைக்கு வந்தனர். ஆதல் வேண்டும். அப்பொழுது " இவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்துவந்த வழக்கப்படி கொடுப்பது" என்ற குறிப்பால் 1811இல் செலவு செய்ததுபோல் சர்க்காரில் செலவு செய்யப்பெற்றது என்று அறியலாம். அந்த சுவாமிகள்

- 62. 5-226 , 63. 1-808- 64. 2-141 - 65. ச. ம. மோ, த. 2-82 66. ச, ம, மோ. த, 18-118 67. 4-285 68, 2-44