பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 "1776 : சுவாமியின் வேண்டுகோளுக்கு முதலில் கஷ்டகாலத்தில் வேண்டினதற்குச் சக்கரம் 20' என்ற மோடி தமிழாக்கக் குறிப்புக்கள் அரச பரம்பரையினர் அடைந்த துன்பச் செய்திகளைச் சுருக்கிக் கூறுவனவாக உள்ளன. - இரண்டாவது தடவை துளஜா பட்டம் பெற்றபொழுது தஞ்சை அரசுக்கு உரிய ஆரணியும் அனுமந்த குடியும் நவாப் வசமே இருந்துவிட்டன. துளஜா கம்பெனிக்குச் சேரவேண்டிய தொகையைக் கொடுத்துவந்த போதிலும் அதிகப்படியாகத் தொகை கேட்கப்பட்டது. அதனால் அரசர் தம் வக்கீல் திரியம்பகசாம்பர்ஜிக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார் :-" 'கும்பினி சேனைக்காக முழுதும் கொடுத்தாய் விட்டது. மேலும் கேட் கிறார்கள் : கவர்னர் கெளன்சிலுக்குத் தெரிவிக்கிறது. ஆரணி அனுமந்தகுடி தேசங்களை நவாப் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவற்றை நமக்குக் கொடுத்தால் கொடுக்கலாம்.' இதனால் ஆரணியையும் அனுமந்தகுடியையும் துளஜா இழந்தார் என்பது உறுதி எய்துகிறது. இங்ங்ணம் மீண்டும் ஆட்சியைப் பெற்றபிறகு துளஜா கும்பினியாரோடு வேறே ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டியதாயிற்று. அவ்வொப்பந் தத்தின்படி தஞ்சைக் கோட்டையில் ஆங்கிலேயர் படை இருக்கலாம். அப் படையின் செலவுக்காக நான்கு லக்ஷம் வராகன் கொடுப்பதாக அரசர் ஒப்புக் கொண்டார். இது பிற்கண்ட மோடி ஆவணத் தமிழ் ஆக்கக்குறிப்புக்களிலும் காணப்படுவதாகும் : "1776 தஞ்சாவூர்க் கோட்டையும் தேசமும் பாதுகாக்க ஆங்கிலக் கம்பெனியினுடைய ஆட்களுக்குச் செலவு செய்வதற்காக நான்கு லக்ஷம் ஹோன்ன புலி கபூல் செய்து லாட் பிகட் பெயரில் கடிதம் எழுதி இந்த வருஷம் பங்குனி மாதம் வாய்தா ஹோன்னபுலி 1,00,000......... צוניי " 1776 தஞ்சாவூர்க் கோட்டை தேசத்தைக் காப்பாற்ற ஆங்கிலக் கம்பெனியாரின் ஒப்பந்த ஆட்களுக்குச் செலவுத்தொயைாக 4 லக்ஷம் ஹோன்ன புலி ஒப்பந்தம் செய்துகொண்டு பீகட்டு பெயரிட்ட கடிதம் எழுதிக் கொடுத்த வகையில் மேற்கண்ட வருவாயில் மார்கழி மாதம் 30 தேதிக்குள் கொடுக்க வேண்டிய தவணை குறித்து ஹாண்டி செய்து சென்னைப்பட்டணத்திற்கு கேஷம்போரிடம்’(?) அனுப்புவது குறித்து, மேற்கண்ட தேதி 12 ஜில்காத் மாதம் 50,000 சக்கரம் உத்தரவான வகையில்போகத் தற்போது மேற்கண்ட 8, 2–137 9. P. 75, Rajayyan 10. 4-91 11. P. 76, K. Rajayyan 12, 12–13 * Cashier (?) 7