பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 16-8-1828இல் ஸர்தாமஸ் மன்ரோ தஞ்சைக்கு வந்த ப்ொழுது அவரை வரவேற்ற சர்க்கார் அலுவலர்களில் இவரும் ஒருவர்". 12-4-1831இல் இவருக்குச் சிவகங்கைக் குளம் பற்றிச்சேனைத் தலைவர் பாபுராவ் இங்க்ளே ஒரு கடிதம் வரைந்துள்ளார்". இரண்டாம் சரபோஜி 1820-22இல் காசியாத்திர்ை சென்றபோது யாத்திரையில் உடன் இருந்த ஸர்க்கேல்" பாபாஜிராமாஜி பண்டிதர் ஆவர். இ. சர்க்கேல் பாபாஜி ராமாஜி பண்டிதர் : கி. பி. 1834இலும் இவர் சர்க்கேலாகக் காணப்பெறுகிறார்". இவருக்குப் பந்த்சுவாமி " என்று பெயருண்டு எனத் தோன்றுகிறது". இவருக்கு அனுப்பிய கடிதங்களில், அனுப்பினது நவம்பர் தேதி 5, இரவு மணி 2 " " அனுப்பினது தேதி 30, ராத்திரி மணி 2 இரவு மணி 2 சகே1744 சித்ரபானு நாம ஸம்வத்ஸர, ஸப்பர் 17ந்தேதி" " நிஜ ஆஸ்விஜ சுத்த சஷ்டி சோமவாரம் அருணோதயம் வந்த ஒரு பட்ச காகிதம்; சப்தமி மங்களவாரம் அருணோதயம் வந்த பத்திரம்-1... அனுப்பியது நிஜ ஆஸ்விஜ சுத்த விஜய தசமி சுக்ரவாரம் அருணோதயம்" என்ற குறிப்புக்கள் கி. பி. 1812க்குரியனவாகக் காணப் படுதலின் இவர் இரண்டாம் சரபோஜி காலத்தில் சர்க்கேல் என்பது உறுதி எய்தும். மேலும் இரவெல்லாம் சர்க்காரில் அலுவல் நடந்தமையும் இவற்றால் தெரியவரும. இதனை, -- . * The greatest part of the State Business is transacted during the night.” என்ற ஹிக்கி (Hicky) அவர்களின் கூற்று வலியுறுத்தும்." இவர் சர்க்கேலாக இருந்த காலத்தில்தான், புதுக்கோட்டை ராஜதானி வலங்கை இடங்கை எனப்பட்ட இரு கட்சிக்காரர்களுள் ஏற்பட்ட பூசல் தீர்த்து வைக்கப்பட்டது." 9-5-1844இல் சென்னை ஜார்ஜ்கோட்டையினின்று இரண்டாம் சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில்ை சர்க்கேல் பாபாஜி ராமாஜி பண்டிதர் கி. பி. 1844இல் இறந்துபோயிருத்தல்கூடும் என்று அறியப்பெறும். இவருடைய

  • பாவாஜி என்றும் பாடம் உண்டு

92. 8-182 முதல் 192 முடிய; ஆங்கிலேய அதிகாரிகள்" என்ற கட்டுரையில், "எலர் தாமஸ் மன்ரோ " அதன் அடிக்குறிப்பு 19க்குரியதும் காண்க. 93. 5-16, 21 94. 1–220 95. .1-289 96. 10–60, 61, 62 97. 10–61 98. 10-62 99. 10-80 100. 10–81 101. The Maratha Principality P, 40 102, 8-19, 28, 26