பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் முதல் தோற்றம் : தத்துவமும் பக்தியும் என்ற இந்தத் தலைப்பு மிகமிகச் சிக்கலான்தாகும். எது தத்துவம் எது பக்தி என்ற ஆராய்ச்சியில் இறங்கினாலொழிய இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஒறறுமை வேற்றுமைகளைக் காண்பது கடினம். இவை இரண்டும் மனிதர்களிடம் மட்டுமே காணப்படுகின்ற கொள்கைகளாகும். அவ்வாறாயின் மனித சமுதாயத்தில் முதன் முதலில் தோன்றியது பக்தியா தத்துவமா என்ற வினாவை எழுப்பினால் உறுதியாக பக்திதான் என்ற விடை கிடைக்கும். மிகமிகப் பழைய காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதன் அச்சங் காரணமாகவே தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கலாம். காடுகளில் தல்ை நிமிர்ந்து நடந்து சென்ற மனிதனை மரக்கொம்புகள் நெற்றியில் இடித்து அவன், நெற்றியிலிருந்து இரத்தம் பெருகச் செய்திருக்க லாம். தன்னுடைய உடம்பிலிருந்து இரத்தம் கொட்டுவது ஆதிமனிதனுக்குப் புதிய அனுபவம்; அதிலும் ஒரு மரக் கொம்பு குத்தி அவனுடைய உடம்பிலிருந்து இரத்தம்