பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 89 உபதேசமும் நடைமுறையும் : மேலை நாடுகளைப் பொறுத்தவரை மற்றொரு வகையிலும் சமய நம்பிக்கை தளரலாயிற்று. அன்பையே அடிப்படையாகக் கொண்ட சமயத்தை வளர்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் ஏற்பட்ட சமயத்தில் அதன் எதிராக அ ச் ச ம ய நிறுவனம் இடைக்காலத்தில் கொலைக்கருவிகள் தாங்கிய படைகளையே தனக்குத் துணையாகக் கொண்டது. அன்பை வளர்க்க வன்பை வழியாகக் கொண்டது. இதனாலும் உண்மை நம்பிக்கை தளர வாய்ப்பு ஏற்பட்டது. சமயம் என்ற பெயரில் உள்ள வெளிப்பூச்சுக்கும் அக வாழ்வில் நடைபெறும் வாழ்க் கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமற் போய் விட்டது. சமயம், சமய வாழ்வு என்றால் ஏதோ இயந்தி ரங்கள் போலச் சில கிரியைகளைச் செய்வதேயாகும் என்ற எண்ணம் வளர்ந்து விட்ட பிறகு சமய நம்பிக்கை தளர் வதில் வியப்பென்ன இருக்கிறது? கேனன் ஸ்ட்னி ஸிமித் என்பார் எடின்பரோ ரெவ்யூ என்ற இதழில் 1809 ம் ஆண்டு பின்வருமாறு எழுதினார். 180 ஆண்டுகள் கழித்து, அணுயுகத்திற்கூட அது உண்மையாய் இருப்பது வியப்பினும் வியப்பே! 1. If the Bible is diffused in Hindustan what must be the astonishment of the natives,to find that we are forbidden to rob, murder and steal; we, who in 50 years have extended our empire over the whole of Indian peninsula and exemplified in our public conduct every crime of which human nature is capable. What matchless impudence, to follow up such practice with such precept. Cannon Sidney Smith in Edinburough Review.