பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ) அ. ச. ஞானசம்பந்தன் சாதியற்ற சைவம் : இறைவன் படைப்பாகிய மக்களுக்குள் சாதி வேறு பாடு பாராட்டும் போலிச் சைவர்கள் எங்கே? அரிசன ராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தம்முடன் வைத் துக் கொண்ட அந்தணராகிய ஞானசம்பந்தர் எங்கே? அதுவே சைவம். பெரியபுராணம் முழுவதிலும் ஐயர் என்ற பட்டத்தை ஒன்பது இடங்களில் மட்டுமே வழங்கிச் சேக்கிழார் நான்கு இடங்களில் அச்சொல்லை இறை வனைக் குறிப்பதற்கும் நான்கு இடங்களில் மனிதரை மட்டும் குறிக்கவும் வழங்கிய சேக்கிழார் அல்லவோ சைவர் அந்த மூவரில் திருநாளைப்போவாரும், யாழ்ப் பாணரும் அரிசனர்,கண்ணப்பர் வேடர், அரிசனர்களாகிய நாளைப்போவாரையும், யாழ்ப்பனரையும் ஐயரே! என்று அழைத்தவர்கள் யார் தெரியுமா? சாதி ஐயர்களாகப் பிறந்த தில்லைவாழ் அந்தணர்களும், திருஞானசம்பந் தருமேயாவார்கள். (திருநாளை. 30-திருஞான. 133, 179, 450) கண்ணப்பரை ஐயர் என்று அழைத்தவர் சேக் கிழார் (கண்.புரா. 103) இத்தகைய ஒருமைப்பாட்டை அன்றே கண்டிருந்தது சைவம். பிறருக்கு, அதிலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத வயது முதிர்ந்தவர்கட் குத் தீங்கிழைத்தால், இழைத்தவர் அரசனாயினும் அவனுடைய அதிகாரிகள் ஆயினும் அதற்காக அஞ்சாமல் அரசன் யானையைப் பாக ரோடும் கொல்லும் ஆற்றலும்நெஞ்சுரமும் கொண்ட எறி பத்தர் வாழ்ந்து புகழ் பெற்றது சைவம். தாம் மேற்கொண்ட குறிக்கோளுக்கு எத்தகைய இடையூறு வருவதாயினும் உயிரைக் கொடுத்தேனும் கொள்கையை நிலைநாட்டும் அடியார்கள் பலர் வாழ்ந்தது சைவம். -