பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 9 25 இயல்பைக் கற்பிக்க முயல்வதும் எல்லாவற்றையும் கண்டு விட்டதுபோலப் பேசுவதும் எத்துணை அறியாமை? அறிதோறும் தம் அறியாமையைக் காண்பவனே உண்மையான விஞ்ஞானியாவான் மதிப்பீடுகள் : எத்துணைத் தூரம் அறிவின் துணைகொண்டு. ஆராயினும் இறுதியில் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றும் ஒர் உள்ளுணர்வு (Intution) ஏற்றுக்கொள்ளப் படுதலை அறிகிறோம். தத்துவ வாதத்திலும் நம்முடைய உள்ளுணர்வின் அடிப்படையில் தோன்றும் ஒரு சில முடிபுகளை ஏற்கும் நிலை ஏற்படுகின்றது. இவை அறிவின் துணைகொண்டு காரண காரிய முறையில் ஆராய்ந்து கண். முடிபுகள் அல்ல. எனினும் அவை மிக அடிப்படையான மெய்மைகளாய் (facts) இருத்தலின் அவற்றை ஏற்பது தவிர வேறு வழி இல்லை. உண்மை (சத்தியம்) நன்மை, அழகு என்பவை வேறு ஒன்றனாலும் அளந்து கண்டறியப்படாத மதிப்பீடுகள் (values) என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அறிவினால் மட்டுமல்லாமல் உணர்வினால் உணரப்பெறும் முழுமுதற் பொருளைத் தியானம் செய்ய வேண்டும் என்பதிற்கூட இருமுறைகள் கையாளப் பெறு கின்றன அங்குங்கூட அறிவின் துணையுடன் தியானம். செய்வது ஒருமுறை. இரண்டாவது அனுபவ மூலம் சாதனை பெறுவதாம். அனுபவமூலம் அடையப்பெறும் இதில் அனுபவம் என்ற ஒன்றும் அனுபவிக்கப்பெறும் பொருள் ஒன்றுமாக இருப்பதில்லை. அறிவிப்பானும் அறிவிக்கப்படும் அறிவும் வெவ்வேறானவை அல்ல. அனுபவமும், அனுபவிக்கப்படும் பொருளும் அறிவிப் பானும் அறிவிக்கப்படும் அறிவும் ஒன்றேயாம். அம் 1. கீதை-விசுவருப யோகம்-38; rேத்ரகேrத்ரத்து விபாக யோகம்-17.