பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் )ே 49 தற்போதம் குவிதலும், உறுதி முதலிய கரணங்கள் ஒரே நிலையில் ஒரிடத்தில் ஒருமுகப்பட்டிருத்தலுமேயாகும்.' பாஸ்டைட் என்ற பெரியார் பக்தி என்பது எல்லாவற்றி னின்றும் தொடர்பை அறுத்துக் கொள்ளுதல் அன்று; அது புதிய ஒர் இறுமாப்பைப் படைத்துக் கொள்வதாகும்,' என்று கூறுவதாக டீன் இஞ்ச் தம்முடைய சமயத்தில் பக்தி' என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கருத்துடன் நாவுக்கரசரின் இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன்தன் பல்கணத்து எண்ணப்பட்டு (4-9-11) என்ற அடிகளை ஒப்புநோக்குக. பக்தர்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் அனுபவம் ஒன்றே என்பதை வலியுறுத்தும். ஈண்டு இறுமாப்பு என்பது நாம் கூறும் அகங்காரமன்று. இன்று இதனைப் 'பெருமிதம்' என்ற சொல்லால் குறிக்கலாம். பக்தியின்மூலம் ஆன்மீக ஒருபமைப்ாட்டை அடையும் வழி யாவர்க்கும் திறந்துளது எனினும் நாம் ஒவ்வொரு வரும் அவ்வழிச் சென்று பயனடையலாம் எனினும் ஒரு 1. "When the soul is said to be passive, the passivity is not a state of inactivity or sassitude. The will is not in abeyance, nor the various faculties inert. All the faculties are directed to one centre, so that there is a narrowing of the field of consciousness through the intense concentration of the will to one focus point.” The Philosophic Basis of Mysticism. — T. H. Hughes P. 50. 2. “Mysticism says Bastide, does not mean disso ciation; it is the creation of a new ego." – Mysticism in Religion P. 35. த.ப.-4