பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 63 படாமலே இருந்துவருகிறது. ஒருவர் தாம் மேற். கொள்ளும் சமயத்தைப்போல ஏனைய சமயங்களிலும் உண்மை நெறிகள் பேசப்பட்டுள்ளன என்பதையும், அவற்றைப் பின்பற்றுபவர்களும் தம்மைப்போன்ற அன்பர் களே என்பதையும் உணர்ந்து கொள்வதில் தவறில்லை. அவரவர் மனநிலை பக்குவம் என்பவற்றிற்கேற்ப ஒவ்வொரு சமயமும் அவரவர்க்குப் பிடித்ததாக ஆகிறது. ஆனால் பெளத்தம் ஒன்று தவிர ஏனையவை பக்தியையும் பெளத்தமும் உட்பட எல்லாச் சமயங்களும் தியானத்தை யும் ஏற்றுக் கொள்கின்றன. நரகம் சுவர்க்கம் : இனி நடைமுறைச் சமயங்கள் அனைத்தும் கூறு ம். ஒன்றைப்பற்றிப் பக்தன் கவலையுறுவதே இல்லை. தான் செய்யும் செயல்கட்கு ஏற்பப் புண்ணிய பாவங்கள் சித்திக்கும் என்பதுபற்றிச் சமயவாதி கவலையுறுவானே தவிர பக்தன் கவலைப்படுவதில்லை அண்ணாத்தல் செய்யாது அளறு’ (25.5) என்று குறள் மூலம் வள்ளுவரும் 'தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள் வான்’ (7-90-1) என சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நல்குரவும் செல்வமும், நரகும், சுவர்க்க மும் ஆய்' (திருவாய் 6-3-1) என நம்மாழ்வாரும் கூறிச் செல்வதால் இப் பெரியார்கள் நரகம் என்ற ஒன்றை, ஏற்றுக் கொண்டனர் என்று நினைய வேண்டியுளது. சமயவாதிகள் கூறும் இதனை இவர்களும் ஏற்றுக் கொண் டனர் என்றே கூறலாம். செய்த தவறுக்குத் தண்டனை பெறுதலும் நலம் செய்தவழி உயர்ந்த உலகங்கட்கு செல்லு தலும் இயல்பு என்பதனை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்கின்றன. - பிறவி வெறுப்பு இல்லை : அடியார்கள், பக்தர்கள் எனப்படுவோர் இவற்றை, ஏற்றுக்கொண்டாலும் இவை பற்றிக் கவலைப்பட்ட