14 தந்தையின் ணை கொளுந்தி'களின் 'களுக்' என்ற சிரிப்பொலி கேட்டது. சேகரும் அசட்டுச் சிரிப்பு சிரித்தான், சமுக்காளத்தைத் தூக்கிப் பார்த்தான், அப்பளம் மாவாக அரைபட்டு இருந்தது. இப்படியா மாப்பிள்ளையை கேலி செய் வது?" என்று லீலாவின் தகப்பனார் ஒரு சப்தம் போட்டார்! 'உம்! அதற்கென்ன!" என்று சேகர்
வாய் முணுமுணுத்தது. மணி பதினொன்று அடித்தது. அப்போதும் குழந் தைகள் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தார்கள் "உம் சீக்கிரம் போய் படுங்கள்"- என்று லீலாவின் தகப்பனார் குழந்தைகளை மிரட்டினார். சேகருக்கு ஏனோ அப்போது வெட்கமாய் இருந்தது. வெற்றிலையை மென்றுகொண்டே உட்கார்ந்திருந்தான் சேகர். மணி பன்னிரண்டு அடித்தது சேகருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. லீலாவின் தந்தை சேகரை நோக்கி வந்தார். "மாப்ள! இந்த ரூமில் போய் படுங்க !" என்று ஒரு அறையை காட்டினார் சேகருக்கு. உம்! என்ன உலகம் ! கல்யாணம் ஆகுமுன் ஆணும் பெண் ணும் சேர்ந்தால்..... பெண்ணுக்குக் கிடைக்கும் பட்டம் 'விபசாரி' ஆணுக்குக் கிடைப்பதோ வரவேற்பல்ல- பாதுகா பட்டாபிஷேகம்! ஆனால் - கல்யாணம் ஆகி விட்டால்....வரவேற்பு மட்டுமா? விளையாடிக்கொண் டிருக்கும் கள்ளம் கபடற்ற குழந்தைகளைக்கூட விரட்டு கிறார்கள்! லீலாவுடன் தன்னை சேர்த்து வைக்க மாமா வுக்கு எவ்வளவு சிரத்தை இதை நினைக்கும்போது- கல்யாணம்" என்பது சட்ட பூர்வமான "வியபசாரம்!" என்ற அறிஞன் வாக்கு சேகருக்கு நினைவு வந்தது. ..