உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தந்தையின் ஆணை ஒரு காலத்தில் படிப்பிலே கெட்டிக்காரத்தன்மையும் புத்திசாலித்தனமும் பிராமணர்களுக்குத்தான் உண்டு அது என்ற எண்ணம் தமிழ் நாட்டிலே இருந்தது. தவறான எண்ணம் என்பதை சேகரைப் போன்ற மாண வர்கள் மெய்ப்பித்தார்கள். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பிராமணரல்லாதவர்கள் 'டாக்டர்' பட்டம் பெறுவது என்றால் மலடி பிள்ளை பெறுவது போல்தான் இருந்தது. அதற்குக் காரணம் பிராமணரல்லாதவர்களுக்கு திறமை அக்கரை கிடையாது என்பதல்ல. "டாக்டர்" பட்டம் வாங்க படிக்க வந்தவன் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. சமஸ்கிருதம் பிராமணர்களின் பிறவி சொத்து, ஆனால் பிராமணரல்லாத திராவிட மக்களுக்கோ அது ஒரு கிரந்தம்! இதனால் திராவிட மாணவர்கள் டாக்டர் பரீட்சையிலே 'பல்டி' அடிக்க வேண்டியதிருந்தது. இதை புரிந்து கொண்ட ஜஸ்டிஸ் கட்சியினர் "டாக்டர் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை யில்லை என்று சட்டத்தை திருத்தினர். அன்றிலிருந்து திராவிட டாக்டர்கள் ஊருக்கு ஊர் பெருக ஆரம்பித் தனர். படிப்பிலும் சேகரைப்போல பல மாணவர்கள் நிபுணர்களாக இருந்தனர். .. . சேகருக்கு கடைசி வருடம் ஆரம்பமாகியது. அந்த வருடம் சென்னையிலே கல்லூரிகளிலே மாணவர்களை சேர்க்கும் விஷயத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டன ; பிராமண மாணவர்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தால் பள்ளியில் போதிய இடங்கிடைக்காததால் பிரபல பிராமண பத்திரிகைகளும், தேசீய தலைவர்களும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உத்திரவை கண்டித்து எழுதவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/27&oldid=1740988" இலிருந்து மீள்விக்கப்பட்டது