தந்தையின் ஆணை 1. பெரிய குடும்பம் ஏழைக்கு ஏனப்பா இத்தனை குழந்தைகள்?" இப்படி அடிக்கடி பகவானைப் பார்த்து கேட்பார் தேவ ராஜ நாடார். கடவுள் அருளால்தான் குழந்தை பிறக் கிறது என்ற குருட்டு நம்பிக்கை அவரிடம் இருந்தது. பக்தர்களைத்தான் பகவான் சோதிப்பார் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு ஆறுதலடைவார். தேவராஜ நாடாருக்கு நாலு குழந்தைகள். ஆறு பெண்கள் இருந்தால் அரசனும் ஆண்டியாவான் என ஒரு பழமொழி உண்டு. நல்ல வேளை நாடாருக்கு நான் கும் ஆண்கள். என்ன இருந்தாலும் அறுபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா? பாலைவனம் என்ற சிறு கிராமத்திலேதான் நாடார் குடியிருந்தார். பூர்வீக ஆஸ்தியாக ஒரு சிறு வீடு அவ ருக்கு இருந்தது. அவர் மனைவி வள்ளியம்மாளிடம் ஏதோ கொஞ்சம் தங்க நகைகளும் இருந்தன. தாய் வீடு போட்ட நகை என்றாலும் அவசியமானபோது அதை விற்க அந்த அம்மாள் தயங்கவில்லை. இப்படியாக எல்லாம் கரைந்து வீடு மட்டும் மீதப்பட்டிருந்தது. நாடார் அவர்கள் விருதுநகரிலே இருந்த குமார் அன் சன்ஸில்தான் குமாஸ்தா வேலை பார்த்து வந்தார். விருது நகருக்கும் பாலைவனத்திற்கும் நல்ல ரோடு இருந்தாலும் இடையே உள்ள தூரம் ஐந்து மைல். காட்டுப்பாதை வழியாக வந்தால் மூன்று மைல்தான். வயதான காலத்
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/4
Appearance