ஆசைத்தம்பி 16. உனை பிரியேன் ! அந்த நள்ளிரவில் கால்கள் சென்ற பக்கம் நடந்தான் நடந்து கொண்டே இருந்தான் சேகர். விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து தான் அவன் கால்கள் நின்றன. விழித்துப் பார்த்தான் இரவு மணி மூன்று. ஏதாவது வண்டியிருக்கிறதா? வழிப்போக்கர் களிடம் அவன் கேட்டான். மூணரை மணிக்கு மதுரைக்கு ஒரு வண்டி." இந்தப் பதிலைக் கேட்டதும், பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுத்தான்; ஒரு டிக்கட் வாங்கி ரயிலில் ஏறினான். அந்தப் பக்கம் வந்த போலீஸ்காரன் சேகரை முறைத்துப் பார்த்தான்: நெருங்கி வந்தான். அடே யார் நீ ? டிக்கட் இருக்கா?" • அரட்டிக் கேட்டான் போலீஸ்காரன். அவன் தான் என்ன செய்ய முடியும் ! ! பிக்பாக்கட்' அடிக்கும் பேர்வழிபோல சேகர் காட்சி அளித்தான்; பேந்தப் பேந்த விழித்துக்கொண்டும் இருந்தான். நல்ல வேளை போலீஸ் காரனுக்கு இங்கிலீஷில் பதில் சொன்னான் சேகர் 1 $ இல்லாவிட்டால்... 61-வது பிரிவுப்படி சந்தேக கேஸ் போட்டு, சேகரை ஜெயிலில் அடைத்திருக்கலாம் அந்த போலீஸ்காரன்! சேகரை மட்டுமென்ன போலீஸ் காரன் நினைத்தால் யாரையும் சந்தேக கேஸ்' என்பதின் பேரில் சிறையில் அடைத்து விடலாம் ! ஜாமீன் எடுக்க ஆள் வருகிற வரைக்கும் யாரும் மீண்டுவிட முடியாது. அது வரைக்கும் 'ஜெயில் கஞ்சி' சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 7 அந்த 'எமவாரண்ட்' சட்டத்திலிருந்து
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/52
Appearance