ஆசைத்தம்பி 87 நடராஜனின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. குருட னாகி விடுவோமோ என்று சந்தேகப்பட்டிருந்த நடராஜன் ஒளியின் நடுவே தன் தம்பி சேகர் நிற்பதை கண்டு மகிழ்ந் தான். அதுமட்டுமா? நளினு மருத்துவ விடுதி டாக்டர் சேகர் எம். பி. பி. எஸ். இப்படி ஒரு பலகை எதிரே இருந்த கட்டிடத்திலே தொங்கிக்கொண்டிருந்தது r கிராமத்திலே ஆஸ்பத்திரி வந்துவிட்டதா? என் தந்தையின் கனவு நனவாயிற்றா? " இதைச் சொல்லிச் சொல்லி பூரித்தான் நடராஜன். வாழ்விலே இதுவரை வேதனையை தவிர வேறு ஒன்றும் அறியாத லீலா 'நர்ஸ்' ரூபத்திலே நின்றதை கண்ட நடராஜன் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத் தோடியது. "சேகர் அண்ணா கோவிச்சுக்கிட்டு போகாட்டா இந்த பட்டிக்காட்டீலே ஆஸ்பத்திரி நிச்சயமா வந்திருக் காது குறும்பு கலந்த பேச்சில் இப்படிக் கூறினான் இளைய வனான மாணிக்கம். "ஆமாம் 1 நடப்பதெல்லாம் நன்மைக்கே! இது வள்ளியம்மாள் வாயில் இருந்து வந்த பொன் மொழி!
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/88
Appearance