உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தந்தையின் ஆணை - தினத்தை இன்ப தினம் என்று எண்ணினார்களோ - அந்த தீபாவளி அவர்களுக்கு துக்க தினமாயிற்று. எண்ணெய் ஸ்நானம் செய்யவேண்டிய காலை நேரத்திலே நாடார் குடும்பம் 'கண்ணீர் ஸ்நானம்' செய்தது. 3. பொறுப்பு தந்தை இறந்ததால், தான் நினைத்தபடி ஆடலாமே என்று படாடோபத்தை விரும்பும் பணக்காரர் வீட்டு 'குழந்தைகள் நினைப்பது உண்டு. ஆனால்-வறுமை நிறைந்த குடும்பத்திலே பிறந்த வாலிபர்கள் அப்படி நினைக்க முடியுமா? நடராஜனுக்கு தந்தை செத்துவிட் டாரே என்ற கவலை மட்டுமல்ல குடும்பப் பொறுப்பை எப்படி ஏற்பது ஏற்று நடத்த இயலுமா என்கிற எண் ணங்கள்தான் மிகுந்த வேதனையை அளித்தது. ? குடும்ப பொறுப்பு சாதாரணமானதல்ல. அறிஞர் களின் திட்டமும், மக்களின் வரிப்பணமும் இருந்தால் ஒரு நாட்டை 'முட்டாள்' கூட நிர்வகித்து விடலாம் ! ஆனால் வறுமை கோரத்தாண்டவம் புரியும் வீட்டை, அனுபவமற்ற ஒரு வாலிபன் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பது சுலபமா? நடராஜன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தான். தன் தந்தை வேலை பார்த்த குமார் அன் சன்ஸ் உரிமையாளரைக் கண்டு வேலைக்காக முறையிட் டான். முதலாளிகளிலும் இரக்கம் உள்ளவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்! இல்லாவிட்டால் நடராஜனுக்கு வேலை தர ஒப்புக்கொள்வாரா ? மாதம் நாற்பது ரூபாய் சம்பளம் கொடுத்தார் அந்த புண்ணியவான். நடராஜனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/9&oldid=1740969" இலிருந்து மீள்விக்கப்பட்டது