பக்கம்:தந்தையும் மகளும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

141

அது வெண்மை நிறமான படிகப்பொடி. அதைக்கட்டியாகச் செய்வார்கள். அதை மேசைமீது வைத்து தீக்குச்சி கிழித்துவைத்தால் நீலநிறச் சுடர்விட்டு எரியும். புகையும் கிடையாது, சாம்பலும் கிடையாது. அது இளகி எரிவதில்லை, உஷ்ணம் பட்டமாத்திரத்திலேயே ஆவியாக எரிகிறது. அதனால் சுடர் அந்தக் கட்டிக்கு மேலாகவே எரியும். சுடர்க்கும் கட்டிக்கும் இடைவெளியிருக்கும். சுடடர் எரியும்போது கட்டியைத் தொட்டு அழுத்தினால் அணைந்துபோகும். கை சுடாது. எரியும்போது நாற்றம் உண்டாவதில்லை. ஆயினும் அந்தக் கட்டியில் நறுமணப் பொருள் சேர்த்தம் செய்வதுண்டு. அது நீரில் கரையாது, அதனால் நீரில் மிதந்து கொண்டும் எரியும்.

இதை ஸ்விட்ஜர்லாந்து நாட்டில் ஒரு ரசாயனக் கம்பெனியார் செய்து வருகிறார்கள். மேனாட்டில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

142அப்பா! கொள்ளிவாய்ப் பிசாசு இருப்பதாகக் கூறுகிறார்களே, அது உண்மைதானா?

அம்மா! சாதாரணப் பிசாசும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசும் கிடையாது. பிசாசு உண்டு என்று எண்ணுவதற்குக் காரணம் வெறும் பயம்தான்.

அம்மா! சதுப்பு நிலங்களில் ஒருவித வாயு உண்டாகும். அதனுடன் பாஸ்பரஸ் கலந்த ஹைட்ரஜன் சேரும்போது அது தானாகவே தீப்பற்றிக்கொள்ளும். இரவில் தூரத்திலிருந்து பார்க்கும்போது அதன் சுடர் அங்கும் இங்கும் ஆடுவதுபோல் தோன்றும. அதைக் கண்டுதான் விஷயம் அறியாதவர்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அஞ்சுவார்கள்.