பக்கம்:தந்தையும் மகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

21

வாஹன சகாப்தம், கொல்லம் ஆண்டு என்று பல உண்டு. முஸ்லீம்கள் முகமது நபி மெக்காவிவிருந்து மதினாவுக்குச் செல்ல நேர்ந்த ஆண்டிலிருந்து தங்கள் சகாப்தத்தைக் கணக்கிடுகிறார்கள். அதை அவர்கள் "ஹிஜ்ரி" என்று அழைப்பார்கள். ஆதியிலிருந்த கிறிஸ்தவர்கள்' ரோமாபுரி நிறுவப்பட்ட தேதியிலிருந்தே கணக்கிட்டு வந்தார்கள். கிறிஸ்து பிறந்து ஐந்நூறு வருஷங்கள் கழிந்தபின் எக்ஸிகன் என்னும் பாதிரியார்தான் கிறிஸ்தவ சகாப்தத்தை ஏற்படுத்தினார். இப்போது உலகமெங்கும் அதையே உபயோகித்து வருகிறார்கள்.

7அப்பா! வானத்தில் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்களாக இருக்கின்றனவே, நட்சத்திரங்கள் இல்லாத இடமே கிடையாதா?

அம்மா! நீ சொல்வது உண்மைதான், வானத்தில் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்களே தெரிகின்றன. எத்தனை இருக்குமோ யாருக்கும் தெரியாது. நம்முடைய கண்ணால் மட்டும் எண்ணினால் இரண்டாயிரம் வரை தெரியும் என்றும், அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் படம் பிடித்துப் பார்த்தால் 150 கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்றும் வான சாஸ்திரிகள் கூறுகிறார்கள்.

அப்படியானால் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லாத இடமே கிடையாது என்றே தோன்றும். ஆனால் அது உண்மையன்று. தொலையிலுள்ள பொருளை அருகில் தெரியும்படி செய்யும் தொலைநோக்கி வாயிலாக வெகு தூரத்தில் பார்த்தால் தூரம் போகப்போக நட்சத்திரங்கள் தெரியாது, குறைந்து கொண்டே போகிறது. இறுதியில் நட்சத்திரங்கள் இல்லாத இடத்தை எட்டி விடுகிறோம்.

ஆகவே நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே கூட்டமாகத்தான் இருக்கின்றன. அவைகள் உள்ள இடத்தை