பக்கம்:தந்தையும் மகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

63


54அப்பா! தண்ணீரைச் சுடவைத்தால் அதன் அளவு கூடும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! கூடத்தான் செய்யும். தண்ணீர் தான் அப்படிக் கூடும் என்று எண்ணாதே. மற்ற திரவப் பொருள்களும் அவ்விதமே சுடவைத்தால் அளவு கூடும். அதனால் தான் வெண்ணெய்யை உருக்கி நெய அளந்து கொடுக்கும் போது அதைச் சூடு குளிர்ந்த பின்னரே அளக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

அம்மா! ஒவ்வொரு பொருளும் கண்ணிற்குத் தெரியாத மூலக்கூறுகளால் ஆனதாகும். அந்த மூலக்கூறுகளுக்கு இடையில் இடைவெளியிருப்பதாகவும் காலமும் அசைந்து கொண்டிருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நாம் தண்ணீரைச் சுடவைத்தால் அப்பொழுது தண்ணீரிலுள்ள மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பித்துவிடுகின்றன. அப்படி அதிகமாக அசைவதால்தான் தண்ணீரின் அளவு கூடிவிட்டதாகத் தெரிகிறது.

55அப்பா! கண்ணாடியை வளைத்தால் ஓடிந்துவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! கண்ணாடியை வளைத்தால் ஒடிந்து தான் போகிறது. அது போலவே அநேக பொருள்கள் நடந்து கொள்கின்றன. அது மட்டுமா கடுதாசி போல் மிக மெல்லிய தகடாக அடிக்கலாம், சில பொருள்களை மெல்லிய கம்பியாக நீட்டலாம். ஆனால் இத் தன்மைகள் எல்லாப் பொருள்களுக்கும் இருப்பதில்லை. இதன் காரணம் என்ன?

அம்மா! நாம் பார்க்கும் ஒல்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மூலக்கூறுகள் என்பவற்றால் ஆனது என்பதை நீ அறிவாய். அந்த மூலக்கூறுகள் பொருள்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றனவோ. அதைப் பொறுத்ததே அவற்றின் தன்மைகள். அத்தகை