பக்கம்:தந்தையும் மகளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

79


72அப்பா! சில நகைகளைத் தங்க முலாம் பூசிய நகைகள் ன்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! தங்க முலாம் போலவே வெள்ளி முலாமும் பூசுவார்கள். அத்துடன் வேறு காரியங்களுக்காக செம்பு,நாகம் முதலிய உலோகங்களைக் கொண்டும் பூசுவதுண்டு. தங்க முலாம் பூசுவது என்றவுடன் தங்கத்தை உருக்கிச் செம்பால் செய்த நகைகளின் மீது பூசிவது என்று எண்ணாதே. முலாம் பூசுவது மின்சார சக்தியின் உதவியைக் கொண்டேயாகும். அதை எப்படிச் செய்கிறார்கள்?

நகையை முதலில் அமிலத்திலும் காரத்திலும் தோய்த்து நன்றாகச் சுத்தம் செய்வார்கள். ஒரு சிறு பாத்திரத்தில் தங்க ஸைனைட் என்னும் உப்பைக் கரைத்து வைத்துக் கொண்டு அதில் சுத்தம் செய்த நகையையும் தங்கத் தகடு ஒன்றையும் வைத்து, நகையை மின்சார பாட்டரியின் எதிர் மின்(-) வாயுடனும், தங்கத் தகட்டை நேர்மின்(+) வாயுடனும் சேர்த்து வைப்பார்கள் அப்பொழுது

மின்சாரமானது தங்க ஸைனைட்டைப் பிரித்து அதிலுள்ள தங்கத்தை நகையின் மீது படியும்படி செய்கிறது. ஸைனைட்டிலுள்ள தங்கம் நகையில் படியும் போது தங்கத் தகடு கரைந்து ஸைனைட் ஆகிக்கொண்டிருக்கும். அதனால் நகை அதிக நேரம் தங்கியிருந்தால் அதன் மீது அதிகமான தங்கம் படியும். அழகுக்காக முலாம் பூசும் பொழுது அதிகமாகப் படியுமாறு செய்வதில்லை.

அழகுக்காக முலாம் பூசுவதுபோல, பொருள்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காகவும் முலாம் பூசுவதுண்டு. தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுவதுபோலவே