பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தந்தை பெரியார்



"சரி அப்பா", என்ற இராமசாமி தன்னுடைய நகைகளைப் பற்றிக் கூறினார். தந்தி அடித்ததும் ரங்கநாத நாயுடு கொண்டு வந்து கொடுத்தார்.

வெங்கடப்பர் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றதும்; மகனை அழைத்துக் கொண்டு ஈரோடு புறப்பட்டார்.


16. கொள்கை வேறு
பதவி என்பது வேறு...


"பதவி மோகம் எவ்வளவு பேர்களை அயோக்கியர்களாக நாணயமற்றவர்களாக ஆக்கி வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். எவ்வளவோ யோக்கியனாகப் பதவிக்குச் சென்றாலும், அவனால் இன்றைய நிலையில் அயோக்கியத்தனம் செய்யாமல் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது."

- தந்தை பெரியார்

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே ஒரு மனிதனைப் பக்குவப்படுத்தி முழுமையாக்குகிறது. என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் இராமசாமி.

காசி மாநகரம் அவருக்கு அனேக பாடங்களை போதிக்காமல் கற்றுக் கொடுத்திருந்தது.

ஈரோடு வந்தபின் இராமசாமி முற்றிலும் புது மனிதராக தன்னலமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவராக வாழ்ந்தார்.

காசியில் உயர் சாதி மக்கள் மத்தியில் ஒருவாய் சோற்றுக்காக ஏறி இறங்கிய சத்திரங்களும் விரட்டி