பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

97


எந்தக் காதுகளால் இராமசாமியைப் பற்றி ஒவ்வொருவரும் நிதம் கூறும் புகார்களைக் கேட்டு வெங்கடப்பர் மனம் வருந்தினாரோ -

இன்று அதே காதுகளில் ஈ.வே.ரா.வைப் பற்றி மக்கள் தேடிவந்து கூறிவிட்டுப் போகும் புகழுரைகளைக் கேட்டு வெங்கடப்பர் பூரித்துப் போனார்.

ஆனால் அந்த மகிழ்ச்சியை அதிக நாள் அனுபவிக்காமல் வெங்கடப்பர் 1911-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

வைணவ சம்பிரதாயப்படித் தந்தையின் உடலைத் தகனம் செய்ய வேண்டுமென்று விரும்பினார் கிருஷ்ணசாமி.

ஆனால் ஈ.வே.ரா. பிடிவாதமாகத் தந்தையின் உடலைத் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தார்.

தந்தையின் நினைவாக அந்த இடத்தில் ஒரு சமாதியையும் கட்டி முடித்தார்.


18. புதிய பாதை - புதிய பார்வை...

"இந்த நாட்டில் கடவுள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கிறானேயொழிய தன்புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதேயில்லை; எப்படி முன்னேற முடியும்?"

- தந்தை பெரியார்

இறைவன் படைப்பில் மக்கள் அனைவருமே சமமானவர்கள்தான். ஆயினும் அழிக்க முடியாத