பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

186



மீண்டும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு, ஏற்காட்டில் ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது, சொந்த உபயோகதிற்காகத் தமது சொந்த நிலத்தில் விளைந்த அரிசியைத் தாமும், தமையனார் ஈ.வி.கே.யும், மணியம்மையாரும் எடுத்துச் சென்றதற்காகப், பெருந்தன்மையும் காருண்யமும் மிக்க சர்க்காரால், தலைக்கு 75 ரூபாய் அபராதம் கட்ட நேரிட்டது. ஈரோட்டில் மூன்றாம் முறையாக நடைபெற்ற திராவிட மாணவர் பயிற்சி முகாமுக்கு வந்து, வகுப்புகள் நடத்திவிட்டு, மறுபடியும் ஏற்காடு திரும்பினார் பெரியார்,

இரண்டாம் உலகப் பெரும் போரில் நேசநாடுகள் இறுதியாக வெற்றி பெற்று விட்டன. இதைப் பாராட்டிப் பெரியார் 12-5-1845 அன்று “குடி அரசு” தலையங்கம் எழுதினார். இதற்குப்பின் ஜூலையில் நடைபெற்ற சிம்லா மாநாட்டில், வைசிராய் வேவல் கழகத்தை அழைக்காவிடினும், வகுப்புவாரி உரிமைக்கு ஒப்புதல் தந்தனர் என்பது குறித்துப் பெரியார் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்திங்களில் மணியம்மையார், ஏ.பி. சனார்த்தனம் இவர்களுடன் ஆந்திர நெல்லூர்ப் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அடுத்த திங்கள் பெங்களூருக்கும் சென்றிருந்தார் பிரச்சாரத்திற்கு.

போலி ஜஸ்டிஸ் கட்சியைத் துவக்க முயன்று தோல்வியுற்ற மாஜிப் பதவியாளர் சிலர், வேறொரு முனையிலிருந்தும் பெரியார் மீது பாணம் தொடுத்துப் பார்த்தனர். இமிடேஷன் சுயமரியாதைச் சங்கம் என்று 14-7-1945 “குடி அரசு” இதனை வர்ணித்தது. தாங்களே மெய்யான சுயமரியாதைச் சங்கம், என ஒன்றைப் பதிவு செய்திட முனைந்தனர். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியப் பெரியார் தொண்டர்கள் 1945-ஆகஸ்ட் 2-ம் நாள் கரூரில் சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பெரியார் தலைமையில் நடத்தி, உண்மை இதுதான் என நாட்டினர்!

திராவிடர் கழக உறுப்பினர் பதியும் பணி விரைந்து முன்னேறி வந்தது. 1945-ஆகஸ்ட் 18-ஆம் நாள் வரையில் உறுப்பினர் எண்ணிக்கை 33,867/- கட்டணத் தொகை ரூ.3367/- ஈரோட்டிலிருந்து பெரியார் “ஜஸ்டிசைட்” என்ற ஆங்கில வார இதழ் துவக்கினார், 1-9-45 அன்று, பின்னர் செப்டம்பர் 3-ஆம் நாள் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ் மொழி பற்றிக் கருத்தாழமிக்க ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். 17-வது நீதிக்கட்சி மாநாடு திருச்சியில் நடைபெற ஆயத்தமாயிற்று.

1945 - செப்டம்பர் 29-ஆம் நாள் திருச்சி புத்தூர் மைதானத்தில் 17-வது நீதிக்கட்சி மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. என். அர்ச்சுனன் திறந்து வைத்தார். தராசுக்கொடி (இங்குதான் கடைசி) மிராண்டா கஜேந்திரன் அம்மையாரால் ஏற்றி வைக்கப்பட்டது. தி.பொ, வேதாசலம் வரவேற்புக் குழுத் தலைவர். அடுத்த நாள் டி. சண்முகம் தலைமையில் 4-வது சு.ம இயக்க மாநில மாநாடு கே.கே.-