பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

208


வி. நடராசன், எஸ். குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றோர் முயன்று பார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப இரு கூறுகளாகப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி.பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவது போல, அவர் கைழுெத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 “விடுதலை” நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30.7.49 “குடி அரசு” இதழிலும் மறுபதிப்புப் பெற்றது. அண்ணா , அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு, அவர்கள் பெயர் “விடுதலை”யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேறவில்லை . “விடுதலை” அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோலிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதி செய்கிறார்கள். சம்பத்தும் சூதனாகி விட்டான் - என்று பெரியார் 13.7.49 “விடுதலை”யில் எழுதினார். பெரியார்மீது அண்ணாவும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர்.

இராம. அரங்கண்ணல் 1946-ல் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். “விடுதலை”, “குடி அரசு “இதழ்களில் சில காலம் பணியாற்றிப் பின்னர் காஞ்சியில் ”திராவிட நாடு” அலுவலகத்திலிருந்தார். 1962, 1967-ல் மயிலாப்பூர், 1971-ல் எழும்பூர் தொகுதிகளின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக அரும்பணி புரிந்தவர். இன்று அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் உள்ளார். திருவாரூரில் கலைஞர், தென்னன், பி.எஸ். இளங்கோ , மா.செங்குட்டுவன் ஆகியோர் இவருக்குப் பள்ளித் தோழர்கள்,

பெரியார் மணியம்மை திருமணச் செய்தி வெளியானதும் அண்ணா தந்த அறிக்கையும், பின்னர் திருமணம் ஆனவுடன் தந்த அறிக்கையும் முக்கியமானவை. 3.7.49 அன்று வெளியிடப்பட்டது. பெரியார் மணியம்மை திருமணத்தை இனித்தடுத்து நிறுத்திட முடியாது என்பது உறுதியாகிவிட்ட பின்னர் சென்ற ஆண்டு நாம் பெரியாரின் 77-வது பிறந்தநாள் கொண்டாடினோம். இந்த