பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

691


பட்டுள்ளன.“பெரியார் காட்சியகம்” திறப்பு விழாவும், பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனைக்கு நான்கு மாடிக் கட்டடம் ஒன்று பெரியார் திடலில் கட்டப்பட அடிக்கல் நாட்டலும், இந்தியப் பிரதமர் சவுதரி சரண்சிங் அவர்களால் 24.11.1979 நண்பகலில் நிகழ்த்தப் பெற்றன. (ஆளுநர் பிரதமரின் பணிகளை நிறைவேற்றினார்) 17.9.1979 அன்று திருச்சியில் மறைந்த நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவாகப், பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த ராதா மன்றம் புதுப்பிக்கப் பெற்றது. பெரியார் மணியம்மையார் படங்கள் திறக்கப்பட்டன. வகுப்புரிமைக்குக் குழிபறித்த 2.7.1979 தேதியிட்ட அரசாணைக்குத் தீயிடும் கிளர்ச்சி 26.11.1979 அன்று நாடெங்கும் திராவிடர் கழகத்தால் நிகழ்த்தப் பெற்றது!