பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

695



 
19. சிறந்தார்
சிறப்பு இயல்புகள் - இதயப்பாங்கு - பழக்க வழக்கங்கள் - பின்பற்றத்தக்க தனிமனித ஒழுங்கங்கள் -
பண்புகள் - பண்பாடுகள் - புறந்தோற்றமும் அகத்தழகும்.

ற்றுக்கண் அடைபட்டு விட்டது. இனி அறிவு ஊற்றுச் சர்ந்து புதிதாக நீர்பெருக வழியில்லை. ஏற்கனவே சுரந்து பெருகிய நீர்தான் அருவியாய் இழிந்து ஓடைகளில் ததும்பி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. வற்றாத செல்வம் வறண்டது; வறுமை திரண்டது! வெறுமை நிறைந்தது!

புத்தி மார்க்கம் கண்டதால் புத்தரெனப் பெயர் பெற்றார் சித்தார்த்தர். மக்களிடையே புகுந்து மடமை ஒழிக்கப் பாடுபட்டார். அவர் கொள்கை இன்று உலகெலாம் பரந்து கிடக்கின்றது; ஓரளவு மாறுதல்களுக்குள்ளான போதிலும் பகுத்தறிவு மார்க்கங்கண்ட இராமசாமி, மக்களிடையே புகுந்து அவர்களுக்காக அயராது பாடுபட்டதால் தந்தை பெரியார் ஆனார். இன்று அவர் கொள்கைகள் உலகத்தால் வியப்புடன் ஆராயப்படுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் அமைந்த அவர் கொள்கைகள்தாம் இன்று தமிழகத்தை ஆள்வதோடு எதிர்கால உலகை ஆளவும் போகின்றன. அவரில்வாத நேரத்தில் அந்தப் பெருமகனாரின் சிறப்புகளை நினைவு கூர்வதுதான் பொருத்தமுடையதாகும்.

பெருந்தன்மைக் குணம், பரந்த உள்ளம், இரக்க மிகு பண்பு. இளகிய மெல்லிதயம் இவை பலாச்சுளைபோல் உள்ளிருக்க; முள் நிறைந்த பலாத்தோல் போல் புறத்தே காணப்பெறும் மேடைத் தோற்றத்தின் முரட்டுத்தன்மை, மூடமதியைச் சாடும் வேகம், அநீதி எனில் பொங்கி எழும் சீற்றம், அச்சந்தயை தாட்சண்யத்திற்கடங்காத ஆண்மைத் திண்மை இவற்றை மட்டுமே பார்த்து அணுகிட அஞ்சி நெருங்காதோரே அநேகர், பெரியாரிடம்!

திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துறையும் மழலைகளைப் போலவே, இந்தத் தமிழகத்துக் கோடானு கோடி பின்னடைந்த மக்களையும் தவிக்கவிட்டுப் போன ஏத்தலின்