பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சைவ, வைணவப் பெரும் பிரிவும்; பல்வேறு உட்பிரிவுகளும்; அவற்றுக்கிடையே ஓயாத போரும் எதனால்? கோடிக் கணக்கில் கடவுளரும் கதைகளும் கற்பனைகளும் மலிந்து காணப்படுவது எவ்வாறு?-என்று விடை காண ஒண்ணாத் பல் நூறு வினாக்கள் தொடுக்கக் காரணமாயுள்ள இந்து மதம், தமிழர்களின் வாழ்க்கையினுள்டே புகுந்து ஒற்று ை குலைத்துச் சின்னாபின்னமாகச் சிதறடித்தது! அடிமை வாழ்வில் சுகங்காண ஆரம்பித்தனர் தமிழ் மக்கள். அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமை; பொருளா தாரத்தில் ஜமீன் மிட்டா மிராசு வணிகர்க்கு அடிமை; சமுதாயத்தில் புரோகிதர்க்கு அடிமை மொழித்துறையில் ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் அடிமை! கலைத்துறையில் புராண இதிகாசங்களுக்கு அடிமை! சாதி அமைப்பில் வர்ணாசிரமத்துக்கு அடிமை! பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்து நிலைமை இதுதான்! தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்கள் கலை நிமிர, அவர்களைக் கைதுக்கி விட்டுக் கண்ணிரைத் துடைத்துக் கவலைகளைக் களைந்திடத் தனிப்பட்டவர்களோ அமைப்பு களோ இல்லவேயில்லை. சமரச சன்மார்க்கம் காண முயன்ற வடலூர் இராமலிங்க அடிகளார்க்குத் தமிழகத் திலேயே போதிய வரவேற்புக் கிட்டிடவில்லை. கண் முடி வழக்கமெலாம் மண் மூடிப்டோக; நால்வருணம் ஆசிரமம் ஆசார முதலா நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளை பாட்டே, சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பே, என்ற அடிகளின் புதிய கருத்துகளை, ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழ் மக்களிடம் வளரவில்லை. மாறாக, அரைத்த மாவையே அரைத்திடும் போக்கில், வழக்கத்தால் செக்கைச் சுற்றி வரும் மாடுகள் போல், பழைய கருத்துகளையே, தத்தம் மொழியில், புதியன போல் புகுத்திய பலரைத், தமிழகத்தார் விரும்பி விரைந்து ஏற்றனர்! இராமலிங்கருக்குக் கிடைக்காத ஆதரவு அவர் காலத்தில் வாழ்ந்த வடநாட்டு இராமகிருஷ்ணருக்கு இங்கே