பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஆச்சார அனுஷ்டானங்கள் மிகுந்து, வைதிக மனப் பாங்கு பெருகித், தம்மை உயர்வகுப்பு வைணவப் பார்ப்பனர் போன்றே கருதிக் கொண்டு வாழ்ந்து வந்த வெங்கட்ட நாயக்கரும், சின்னத்தாயம்மையாரும் தமது இளைய புதல் வனின் இந்த அடாத செயல்களைக் கேட்டுத் துடிதுடித்துப் போயினர். கண்டவர் வீடுகளில் சாப்பிடுவது தவறு எனக் கண்டித்துக் கோபித்தனர். பயன்தராது போகவே, மகனின் கால்களில் விலங்குக் கட்டைகளைப் பூட்டி வருத்தித் தண்டித்தனர். . மூன்றாண்டுகள் திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கும், இரண்டாண்டுகள் ஆங்கிலம் போதிக்கும் பள்ளிக்கும், இராமசாமியைப் பெற்றோர் அனுப்பி வந்ததுகூட, அவர் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அல்ல; வீட்டி லிருந்து தொந்தரவு தருவதைவிட, எங்கோ வெளியில் சென்றுவிட்டாவது வரட்டுமே என்ற எண்ணத்தால்தான்! பத்தாவது வயதிற்குள் பள்ளி ஆசிரியர்கட்கும் பெற்றோ ருக்கும் தீராத தலைவலியைத் தந்து வந்த இராமசாமி, தமது அய்ந்தாண்டுப் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார். பிள்ளைக்குப் படிப்பு ஏறாது என்று கண்டறிய அய்ந்தாண்டுகள் பிடித்ததாம் அவர்கட்கு! படிப்பு ஏறவில்லை என்றாலும், தமது மகனின் அறிவுத்திறன், ஆற்றல், கூர்மை இவைகளில் தந்தையார்க்கு மெத்த நம்பிக் கையுண்டு. படிப்பில் கவனஞ் செலுத்தாவிடினும் இராம சாமியைத் தொழிலில் நுழைத்து விட்டால், உழைத்து உயரும் தன்மை நிரம்ப அவருக்கு இருப்பதை, வெங்கட்ட நாயக்கர் உணர்ந்து, அவரைத் தமது ஏலமண்டிக்கே அழைத்துக்கொண்டார். . தமது பன்னிரண்டாவது வயதிலேயே, இந்தச் செல்வந் தரின் திருக்குமாரன், மண்டிக்கடையில் முட்டைகளில் குறிப்பு எழுதுதல், ஏலங்கூறுதல், சரக்குகளை உயர்ந்த விலைக்கு விற்றல், வாடிக்கையாளரை நழுவவிடாமல் பற்றுதல் ஆகிய செயல்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார். தந்தையார்க்கும் மகன்மீது பாசமும் பற்றும்