பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

யத்தில் செய்த திருவிளையாடல்கள் பல. கடைவீதியில் இவரது மண்டிக் கடை செல்லும் வழியில் இருந்தது ஒர் அய்யரின் கடை. தினந்தோறும் அவரிடம் வாதம் புரிவது இராமசாமிக்கு உற்சாகமான காரியம். எல்லாம் தலை விதிப் படி நடக்கும்; அவனன்றி ஒரணுவும் அசையாது என்பது அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்து இராமசாமியிடம் வாதாடு வார் அய்யர். ஒரு நாள் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது வீழ்ந்து, பலத்த காயத்தை உண்டாக்கி விட்டது. தம்மைத் திட்டிக் கொண்டே, தாக்கத் துரத்திய அய்யரைப் பார்த்து, இராம சாமி, 'இது தலை விதிப்படி நடந்தது; எல்லாம் அவன் செயல்'-என்று பதிலடி கொடுத்தார்.

இவ்விதம், இயல்பாகவே இவரிடம் இம்மாதிரியான அறிவார்ந்த பண்புகள் நிரம்பியிருந்தன. தாராளமாகவும், அஞ்சாமலும், தயக்கமின்றியும் வாதமிடும் துணிவு இருந் தது. தம் வீட்டில் நடைபெறும் மத நம்பிக்கைக் காரி யங்கள் யாவுமே பொருளற்றவை; சடங்குகள் அர்த்த மில்லாதவை; செலவுகளெல்லாம் வீணானவை என்று இவர் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து வந்தார், சாதி வேறுபாடுகளால் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மனப் பான்மைகளும், இவரது உள்ளத்தில் ஆழப் பதிந்ததால், அவை குறித்தும், இவர் தமது எண்ணத்தைத் தீவிரமாய்ச் செலுத்தி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இராமசாமி தமது வாணிபத் தொடர்பிலும் மேலோங்கி வளர்ந்து வந்ததால், பெற்றோர் இவரை வெறுத்தொதுக்க இயலவில்லை. இராம சாமிக்கு இப்போது பதினெட்டாண்டுகள் முடிந்து, பத் தொன்பது வயது தொடங்கிற்று. இந்தக் கால கட்டத்தில் தமது தந்தையார்க்கு இருந்து வந்த சமுதாயநிலை என்ன என்பதைப் பின்னாட்களில்