பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பிள்ளையாயினும், இராமசாமியின் போக்கும் நோக்கும் தனித்தன்மை பெற்ாவை அன்றோ? எனவேதான் தாய் தந்தையரின் விருப்பத்துக்கு முரண்பட்டுக் தமக்கு வேறொரு பெண்மீது நாட்டமென்றும், மணந்தால் அந்தப் பெண்ணை மணப்பதாகவும் உறுதியாகக் கூறிவிட்டார் இராமசாமி பெற்றோரின் கற்பனைக் கோட்டை தகர்ந்து துகளாயிற்று. சரி, வேறு வழியில்லை; . இந்தப் பிள்ளை யாண்டான் சொந்த விருப்பத்தின்படியே நடப்பான்; சொன்னால் கேட்க மாட்டான் யார் அந்தப் பெண் பாவை? என்று விசாரித்தனர் பெற்றோர். சின்னத்தாயம்மையாரின் தம்பி உறவுடைய சேலம் தாதம் பட்டி ஹெட்கான்ஸ்டபிள் ரங்கசாமி நாயக்கருக்கு மனைவி பொன்னுத்தாயம்மாள் மூலமாக தேவராஜன் என்ற ஒரு மகன், முத்தம்மாள், நாகம்மையார் இரு பெண் மக்கள். அவர்களில் இளைய பெண் நாகம்மை பதின்மூன்றாண்டு பிராயத்தில் இருந்தது. அதற்கு இராமசாமியார் மீது உள்ளுறக் காதல், சமுதாயத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அந்தப் பெண், தனது மன நாட் டத்தை வெளிப்படுத்தியும், தகுதிக்கு மீறிய செயல் எனத் தடுத்திட்ட அதன் பெற்றவர்கள், யாரோ ஒரு பண்பாடற்ற பணம் படைத்த முதியவருக்கு மூன்ருந்தாரமாக்க இசைவு தந்தனர். தன் காதல் போயின் சாதல் என்று நாகம்மை தற்கொலைக்குத் தயாராகிவிட்டது ! இந்த நாகம்மைதான் இராமசாமியின் உள்ளங்கவர்ந்த கன்னியாம் என, இரு சாராரும் தெள்ளிதின் உணர்ந்து கொண்டனர். பிறகென்ன ? இப்படியாகப் போராடிப் புனைந்த புது மணவாழ்வில் இணைந்த இரு இளம் நெஞ்சங் களும் அளவிட ஒண்ணா அன்பு வெள்ளத்தில் ஆழ்ந்து திளைத்தன. உறுதியுடன் நின்று பெற்ற வெற்றித் திருமணம், இறுதிவரை இன்ப இணைப்பாகத் திகழ்ந்ததில் என்ன வியப்பு ? முப்பத்தைந்தாண்டுகள் இந்த இலட்சிய