பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கிடைக்காத அவலமா? ஏன் இந்த ஏற்றத் தாழ்வு நிலை? யார் இதற்குக் காரணம்? இவ்வளவு கொடுமையான நிலையி: லும், இடுப்பில் மோதிரம் பத்திரமாக உள்ளதா எனத் தடவிப் பார்த்துக் கொண்டு புறப்பட்டார்! உண்மையான துறவுக்கோலம் பூண்டார். முகத்தினை மழித்தார். தலை முடி இறக்கினார், ஆடைகளைக் களைந்தெறிந்து கோவனந் தரித்தார். வந்துவிட்டது பாதேசிக் கோலம்! இனி இந்த வேடத்தில் பிழைப்பு நடத்திட இயலும் என்ற நம்பிக்கை பிறந்தது! வேலை தேடி ஒவ்வொரு இடமாகச் சென்றார். மடம் ஒன்றில், சிறு அலுவல் கிடைத்தது. ஒரு வேளை சாப்பாடு. அதி காலை எழுந்து, குளித்து முழுகித், திருநீறு அணிந்து, அருச்சனைக்கான மலர்கள் பறித்துத் தரவேண்டும். மாலை யில் மீண்டும் முழ்கி வந்து, திருவிளக்கு ஏற்ற வேண்டும். கடுமையான நிபந்தனைகள் இராமசாமியாருக்கு இவை, கண் முன் நாகம்மையார் தோன்றினார். அன்றாடம் பல்விளக்குவதும், குளிப்பதும் அவசியமானவை அல்ல, என்ற பிடிவாதக் கொள்கையுடைய தம் கணவரைப், பலவந்தமாய் இழுத்துச் சென்று, பல் துலக்கிக், குளிப் பாட்டி விடும் அம்மையாரின் அன்புப் பணியினை இங்கே யார் செய்ய முன் வருவார்? நடுக்கும் குளிரில் நாள் தவறாமல் நீராடுவதா? மடத்துச் சாமியார் விழித்துக் கொள்ளுமுன் எழுந்து, பட்டை பட்டையாக விபூதியினைக் குழைத்து மேனி எங்கும் தீட்டிக், குளித்துவிட்ட பாவனை யில் மலர் பறித்து வருவார். இந்தக் கள்ளத்தனமும் ஒரு நாள் கண்டு பிடிக்கப்பட்டது. கையில் கிடைத்த வேலை கை நழுவிப் போயிற்று! கங்கைக் கரையில் கையேந்திச் சில நாள் காலங் கழித்தார் அங்கு கண்ட அநாச்சார, அவலக் காட்சிகள், பிண்டம் போட்டு இறந்தவர்க்குச் சிரார்த்தம் நடத்தும் பண்டாக்களின் ஈனத்தனமான எத்து வேலை மோசடிகள், ஒழுக்கக் கேடும், விபச்சாரமும், வழுக்கி விழுத லும், ஒரு பொருட்டாக மதியாமல், பார்ப்பன மாந்தர்பெண்டிர் உட்பட, மது மாமிசம் அருந்தும் அயோக்கியத்