பக்கம்:தந்தை பெரியார்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. விரைந்தார் சேலம் மாநாடு-திராவிடர் கழகம் பிறந்தது-வடநாடு பயணம்கருப்புச் சட்டை-ஆகஸ்டு 15 துக்க காள்.-ஜூலை 1 திராவிட நாடு பிரிவினை நாள்-மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர்-துத்துக் குடி, ஈரோடு மாநாடுகள்-1944 முதல் 1948 முடிய. - . முத்தமிழ்க் கலைஞர்கள் சுயமரியாதைக் கொள்கை களையும் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்ய உதவி யாகப், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சி மேற் கொண்டு, சென்னையில் முத்தமிழ் நிலையம் ஒன்றை அமைத்தார். 1944 சனவரி 2-ஆம் நாள் பெரியார் இதனைத் தொடங்கி வைத்தார். பாரதிதாசன் கவிதைகள் 'குடி அரசு' வாயிலாக நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, இதற்குள் மூன்று பதிப்புகள் செலவாகிவிட்டன. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 7-ஆம் நாள் கா. சுப்பிர மணிய பிள்ளை தலைமையில் பெரியார், தமிழிசையும் (கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பின் கீழ், அரியதோர். ஆராய்ச்சிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் தமிழன் தன் பொருளைச் செலவழித்துத், தான் நுகரும் இசை, தமிழ் மொழியில் இருக்கவேண்டுமென்று கேட்பது தவறா? இந்த உணர்ச்சி இப்போது வெற்றி பெற்று வருவது பாராட்டற்குரியதுதான் எனினும், நரஸிம்ஹ மூர்த்தியே என்று பாடி வணங்குவதற்குப் பதில் சிங்கமுகக் கடவுளே,