பக்கம்:தந்தை பெரியார்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 என்று பாடி வணங்குவதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? பஜனை, பக்திப் பாடல்களை எந்த மொழியில் பாடினால் தான் என்ன? அதே போல் புராண நாடகங்களால் என்ன பலன்? நந்தனார் பார்த்தால் தீண்டாமை பெருகும்; கிருஷ்ணலீலா பார்த்தால் விபச்சாரம் பெருகும்-என விளக்கினார். இவைகளை முறியடிக்க எம். ஆர். ராதா நடத்தி வரும் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் ஆதரித்து வந்தார். நாகப்பட்டினத்தில் மார்ச் 10-ஆம் நாள் எம். ஆர். ராதாவைப் பாராட்டினார். நடிகவேள் என்று திருச்சியில் பட்டுக்கோட்டை அழகர்சாமியால் பட்டமளிக்கப்பட்ட எம். ஆர். ராதா 1943-முதல் புரட்சிகரமான சுயமரியாதைக் கருத்து களை விளக்கி நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் சி.பி. சிற்றரசு எழுதிய போர்வர்ள், கலைஞர் மு. கருணாநிதி எழுதிய துரக்குமேட்ை, திருவாரூர் தங்கராசு எழுதிய ரித்தக் கண்ணிர் இவற்றைத் தமிழ் நாடு முழுதும் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து நடத்தினார். அரசின் அடக்கு முறைக்கு அடிக்கடி ஆளாகிப், போராடி வென்றார். கட்சிக் கட்டுப்பாடு கட்கு ஆட்படாமல் பெரியாரின் உண்மைத் தொண்ட ராக விளங்கிய அச்சமறியா இயல்பினர். 1967-ல் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரனைச் சுட்டதாக நடந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். விடு தலையாகி வெளிவந்த பின்பும், தனிப்பட்ட முறையில் கொள்கை விளக்கமும் நடிப்பும் தொடர்கிறார். , - சேலம் செவ்வாய்ப் பேட்டையில் கடந்த ஆண்டே துவக்கப்பட்ட திராவிடர் கழக முதலாண்டு விழாவில், சனவரி 16-ஆம் நாள், பெரியார் பங்கேற்றார். பிப்ரவரி 13-ஆம் நாள் சென்னையிலும், 20-ஆம் நாள் திருச்சியிலும் மாவட்ட நீதிக்கட்சி மாநாடுகளைத் திறந்து வைத்தார். சுதந்திரத் திராவிட நாடு பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், புராண இதிகாசக் கதைகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தியும் திராவிட மக்களுக்கு எழுச்சியுண்டாக் கினார் பெரியார். தமிழ்ப் புலவர்களும், ஆசிரியர்களும், இளம் மாணாக்கர்க்குப் புராணக்கதைகளைப் பாடமாகப்