பக்கம்:தந்தை பெரியார்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 போதிக்காமல், அறிவுவளர்ச்சிக்கு உகந்தவற்றையே கற்பிக்க வேண்டிப் பெரியார் பல கட்டுரைகள் தீட்டினார். - 1944ஆம் ஆண்டின் துவக்கமே பெரியாரின் மொழிப்படி நற்குறிகளின் துவக்கமாகத் தென்பட்டது. தென்னகத்தில் பெரியாரின் பெருந்தொண்டால் புதிய எழுச்சி ஒன்று எங்கணும் பரவி வியாபித்தது. ஒன்று கலைத்துறையின் மறுமலர்ச்சி! மாணாக்கர் எழுச்சி மற்றொரு புதுமையாகும். 1942-ஆகஸ்டுக் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் பெரும் பங்கு கொண்டனர். அதன் பின்னர் உண்மை உணர்ந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள், தாம் தவறான பாதையில் இழுத்துச் செல்லப் படுவதை உணர்ந்து, தந்தை பெரியார் காட்டும் பகுத்தறிவு ஒளியில் கவனஞ் செலுத்தத் துவங்கினர். ஆரிய வஞ்சகத் தால் திராவிடர் எதிர்காலம் இருட்டாவதை உணர்ந்தனர். பெரியாரின் 'குடிஅரசு’, அண்ணாவின் திராவட நாடு' இதழ்கள் உணர்வுத் தீயை மூட்டிவிட்டன. மாணவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடச் சட்டங்கள் தடைசெய்தன. அதனால் முதலில் பெரியாரின் சம்பந்தமில்லாது கும்ப கோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு 1944 பிப்ரவரி 19, 20, இருந்ாட்களிலும், மிகுந்த எழுச்சிமயமாய் நடைபெற்றது. அண்ணாவும் பிறரும் அரிய சொற்பொழிவு களை ஆற்றினார்கள். மாணவர் மட்டுமல்லாது ஆசிரியரும் பேரெழுச்சி கொண்டனர். கோ. சி. பெரியசாமிப் புலவர், குழந்தையா, நன்னன், நா. மு. மாணிக்கம், ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், இரா. தண்டபாணி, க. அ. மதியழகன், பூ. கணேசன், இரா. செழியன், த. மா. திருநாவுக்கரசு, கி. தியாகராசன், ஆகி யோரை மாநாட்டில் அறிமுகம் செய்தனர் குடந்தை மாணவர்களான எஸ். தவமணி இராசன், எஸ். கருணா னந்தம், இரா. சொக்கப்பா ஆகியோர். - 1943 முதல் குடி அரசு' இதழில் கட்டுரைகள் திட்டிவந்த க. அன்பழகன், பச்சையப்பன் கல்லூரியின் தமிழாசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார். தமது