பக்கம்:தந்தை பெரியார்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ரா. செழியன், நாவலர் நெடுஞ்செழியனின் இளவல். 1957-ல் தி.மு.க. சார்பில் நாடாளு மன்றத். தேர்தலில் குதித்தார். 1962, 67, 71 ஆண்டுகளில் வென்று, நற்பணியாற்றினார். அண்ணாவின் அருந்: தோழர். இன்று ஜனதாக் கட்சியின் சார்பில் மாநிலங் களவையினை அலங்கரிக்கிறார். - பூ. கணேசன் தந்தையார் பூவராகனார் பகுத்தறி வாளர்; எனவே தம் மக்களையும் தம் வழியில் ஈடுபடுத் தியவர். ‘நிலவு' இதழ் நடத்தி வந்து, 'விடுதலை'யில் சில காலம் பணியாற்றிப் பின்னர் குடும்பநலத்துறையில் நீண்டநாள் அரசு அலுவலராக விளங்கி, ஒய்வு காணும் வயதில் உள்ள கணேசன் அமைதி, அடக்கமுடையார். இ.ரெ. இளம்வழுதி எனும் தண்டபாணி கடலூரில் சிறந்த வழக்கறிஞர்.குறையாயுளில் மறைந்து போனார். கருப்பு இளவரசன் என்ற சிறப்புப் பெயருக் கேற்பத் துவக்க நாட்களில் நன்கு இயக்கப்பணி புரிந்தவர். மதியழகன் உருவமோ குள்ளம். உள்ளமோ உயரம். இயக்கப் பணியோ ஏராளம். துவக்க நாட்களில் பெரியார் பாசறையிலிருந்து, பின் அண்ணாவின் நண்ப ராகி, நல்ல தொண்டாற்றிய முழுநேர அரசியல்வாதி. அண்ணாவின் அமைச்சரவை, கலைஞரின் அமைச் சரவைகளில் உறுப்பினராகவும், சட்டப் பேரவை, மாநிலத் திட்டக்குழுத் தலைவராகவும் விளங்கியவர். அண்ணா தி.மு. கழகத்தில் இணைந்தார். இன்று உடல் நலிவுற்று ஒய்வாக வாழ்கின்றார். . எஸ். தவமணி இராசன் 1943-ல் கும்பகோணத்தில் முத்ன்முதலில் திராவிட மாணவர் கழகம் அமைத்தவர். தோற்றம் கவர்க்சியற்றது; தொண்டை கணிரென்பது: தொண்டு இவர் உயிர்மூச்சு; தோழமை இவர் நல்லுணவு பெரியாரிடமும் அஞ்சாமல் பேசும் வெகுளி யான உள்ளம் படைத்தவர். அவரது உண்மையான தொண்டராதலால் என்றும் அன்புடன் நேசிக்கப் பட்டவர். ஓயாது உழைப்பது இவரது இலட்சியம். ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சி முகாம் இவரது தனிச்சிறப்பு, குடிஅரசு” அலுவலகம் இவருக்குக் குடி யிருப்பு. குடந்தை திராவிட மாணவர் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஆக்கியவர் இவரே; இவர் ஒருவரே! . w -