பக்கம்:தந்தை பெரியார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஈரோட்டில் 1944 ஏப்ரல் 17-ஆம் நாள் நடைபெற்ற திராவிட இளைஞர் மாநாட்டையொட்டி எல்லா மாணவர் களையும் பெரியார் நேரில் பார்த்துக்கொள்ள விரும்பினார். அண்ணா தலைமையில், நெடுஞ்செழியன் திறந்துவைக்க, அன்பழகன் கொடிஏற்ற, இம்மாநாடு எழுச்சியுடன் நடை பெற்றது. பழையகோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன் வரவேற்புக் கழகத் தலைவர். எஸ். ஆர். சந்தானம் செயலாளர். இதனை ஒட்டியே மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரியாருக்குத் திடீரென்று உடல் நலம்குன்றி, நடக்க முடியாமல் அவதிப் பட்டார். எனினும் புதிய வரவுகளான மாணவர்களை ஆவலுடன் கண்டு உரையாடிக் களித்தார். இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற கம்பர் மாநாடு கலவரத்தில் குழப்பமாகி, நடைபெறாமல் நின்று விட்டது. இது சுய மரியாதைப் பிடாரிகளின் அடாத செயலென்று தமிழ்நாட் டின் அக்கிரகாரப் பத்திரிகை உலகம் அவதூறு பொழிந்தது. கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மிகப்பெரும் பண்ணைக்காரராகிய பட்டக்காரர் குடும்பத்திலிருந்து கழகத்துக்கக் கிடைத்த நன்முத்து என். அர்ச்சுனன், 20 வயதில் ஈடுபட்டு 23 வயதில் வாழ்வையே முடித்துக் கொண்டார். இந்த மூன்றாண்டுகளில் முப்பதாண்டுப் பொதுப்பணியை அற்புதமாய்ச் செய்து காட்டினார். இந்தக் காலகட்டத்தில் ஏராளமான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தியும், பங்கேற்றும் சிறப் பித்தார். - - - - எஸ். ஆர். சந்தானம் மாப்பிள்ளை நாயக்கரின் முதல் மகன். நெடுநாள் ஈரோடு நகரமன்ற உறுப்பினர். கோவை மாவட்டதிராவிடர் கழகத் தூண்களில் முக்கிய மானவர். பெரியார் நினைத்தவண்ணம் முடித்திடும் ஆற்றலுடையார். - மாணவர்கள் பயிற்சிபெற்று மாவட்டந்தோறும் இயக்கப் பிரச்சாரம் செய்திடப் புறப்பட்டனர். அந்தக் கோடைவிடு முறையில் தொடங்கிய இவ்வழக்கம், திராவிடர்கழகத்தால் இன்றளவும் கையாளப்படுமாறு, பெரியார் பணித்துவிட்டார்.