பக்கம்:தந்தை பெரியார்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 பிரிட்டிஷ் அரசு சிறையிலிருந்த காந்தியாரை விடுதலை செய்து விட்டு, வெள்ளையனே வெளியேறு என்று.1942 ஆகஸ்டில் செய்த தீர்மானத்தைத் திரும்பப்பெறுமாறு கேட்டது. காந்தியார் விடுதலையால் யாருக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? இறந்துபோன தம் மனைவியார் பெய ரால் கஸ்தூர்பா நிதிவசூலித்து, அடுத்துவரும் பொதுத்தேர் தலில் நிறையச் செலவு செய்ய முனைந்துவிட்டார்களே! என்றார் பெரியார். மே மாத இறுதியில் சென்னை மாநில 3-வது மருத்துவகுல மாநாட்டைச் சென்னையில் திறந்து வைத்துவிட்டுப் பெரியார், ஜூன் முதல்வாரம் ஆந்திரப் பகுதியில் சுற்றுப்பயணம் சென்று வந்தார். பாக்கிஸ்தான் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியார், இறுதியில் ஜின்னாவைச் சந்திக்க இசைந்ததைக், காந்தியாரின் சரணா கதி எனப் பெரியார் வர்ணித்தார். அவர்கள் பேச்சு முறிந் -ததையும் விமர்சித்தார். நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. பழைமை வாதிகள் சிலர் திட்டமிட்டுப் பெரியாரின் தலைமைப் பதவி .யைப் பறித்திடக் கனவு கண்டனர். பெரியாரின் தீவிரப் போக்கு கண்டு மனங்குமுறும் பதவிப்பித்தர்கள் அவர்கள். ஆனாலும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும்-குறிப் பாகத் தஞ்சை திருச்சி மாவட்டங்களினின்றும்-சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்களின் முயற்சி யால் எதிர்ப்பு தலைகாட்டவே முடியவில்லை. ஏற்கனவே சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒருமாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரைத் திராவிடர்கழகம்என மாற்றவேண்டிப் பரிந்துரைக்கும்முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் கட்சி யின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந் தான். பெரியாரின் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறைவேற்றினார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கவுரவப் பட்டங்களான