பக்கம்:தந்தை பெரியார்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தான் ஜஸ்டிஸ் கட்சி என்று அறிக்கை விட்டனர். பெரியார், அவர்களின் தவறான போக்கைக் கண்டித்துக் குடி அரசு’ 17-9-1944 இதழில் எழுதினார். அதே போன்று டாக்டர் அம்பேத்கார் சென்னை வந்தபோது, அவருக்கு நீதிக்கட்சி யின் சார்பில் என்று சொல்லி, இவர்கள் செப்டம்பர் 22-ஆம் நாள் விருந்தொன்று கொடுத்தனர். உண்மை நிலவரம் உணர்ந்த அம்பேத்கார், இவர்களைக் கண்டித்து உரை" யாற்றினார். அடுத்த நாளே பெரியார் இல்லத்துக்குத் தாமே வருகை தந்து, நீண்ட நேரம் உரையாடியும் சென்றார். இம்மாதம் 29-ஆம் நாள் திருச்சியில் பெரியார் இடத்துக்கு வந்து, அனைத்திந்திய இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே, பெரியாரைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ் நாடு இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் வரதராசலு நாயுடுவும் வந்திருந்தார். இந்து என்ற சொல்லுக்கே ஆதாரம் இல்லை என வாதாடி னார் பெரியார். அனைத்திந்திய திராவிடர் கழகம், அமைத்திட, மூஞ்சே பெரியாரிடம் கேட்டார். தஞ்சையில் புரட்சிக் கவிஞர் தலைமையில் நடந்த திராவிட மாணவர் மாநாட்டை 26-ஆம் நாள் பெரியார் திறந்து வைத்தார். கரூரில் 24-ஆம் நாளும், கோளை வில் அக்டோபர் முதல் நாளும் நடைபெற்ற கழக மாநாடு களில் கலந்துகொண்டார். கோவை மாநாட்டில் சென்னை: சத்தியவாணி முத்து பங்கேற்றார். சென்னையில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் தோன்றிய சத்தியவாணி, அவர் கணவர் எம். எஸ். முத்து இருவரும் சிறந்த சமுதாய சீர்திருத்தத் தொண்டர்கள், பெரியார் வழி நின்று சத்தியவாணி சிறந்த பேச்சாளராக விளங்கினார். அண்ணாவுடன் தி.மு.க. அமைப்பில் இருந்து வந்தார். அண்ணா, கலைஞர் அமைச்சரவை களில் இடம் பெற்றார். அ. இ. அ. தி. மு. க. சார்பில், டெல்லி மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து, சமூக நலத்துறை அமைச்சராகியுள்ளார். - சிதம்பரத்தில் நடைபெற்ற வர்ணாசிரம மறுப்புக் கூட்டத்தில் பெரியார் அக்டோபர் 14-ஆம் நாள் பங்கேறி