பக்கம்:தந்தை பெரியார்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 றார். புராணங்கள் கற்பனையானாலும், சைவரும் வைண. வரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பி அடித்துள்ள வேடிக்கையைப் பெரியார் நன்கு பிரித்துக் காட்டினார். பக்தலீலாமிருதம் வைணவ ஆழ்வார்கள் 82 பேரைப் பற்றி உரைக்கிறது. பெரிய புராணம் 63 சைவ நாயன்மார் களைப் பற்றிப் பேசுகிறது. நாயன்மார் நால்வர். ஆழ் வாராதியர் பன்னிருவர். மேலும் பொதுவுடைமைவாதி களைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியாவில்தான் சாதி யும் வகுப்பும் தனித்தனியே இருக்கின்றன. மேல் நாடுகளில் வகுப்பு பேதம்தான் இருக்கிறது; அதனால் அதை ஒழித்தல் சுலபம். இங்கே முதலில் சாதியை ஒழித்தால்தான் வகுப்பை நீக்க முடியும். சாதியை ஒழிப்பதுதான் சிரமம். அதில் அவர்கள் நுழைய மாட்டார்கள்; அதுதான் நமது போராட்டம்-என விளக்கினார். சாதி என்றால் Caste என்றும், வகுப்பு என்றால் Class என்றும் பெரியார் வேறு பாட்டைத் தெரிவித்தார். - • * கலையுலகில் மறுமலர்ச்சித் தூதுவராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் சென்னையில் ஒரு நாடக சபா துவக் கினார். அவரது இழந்த காதல் நாடகத்துக்குப் பெரியார், நவம்பர் முதல் நாளிரவு தலைமை ஏற்றுப் பாராட்டினார். கலையுலகில் அவர் மீதும், எம். கே. தியாகராச பாகவதர் மீதும் அவதூறுகளைக் கிளப்பி விட்டிருந்தனர் அழுக்காறு படைத்தோர் சிலர். பெரியாரின் ஒத்த வயதினரும் மதிப்புக் குரிய நண்பருமான செ. தெ. நாயகம் 1944 டிசம்பர் 13-ஆம் நாள் மறைந்தது குறித்துப் பெரியார் மிகுந்த வருத்த முற்றார். - டிசம்பர் 24-ஆம் நாள் அண்ணாவுடன் புறப்பட்டுப் பெரியார் கல்கத்தா சென்று, அங்கு எம். என். ராயின் தீவிர ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 27-ஆம் தேதி உரையாற்றி னார் பெரியார். தனது நாத்திக ஆசான் பெரியார் என்றும், அவரளவு நாத்திகத்தைப் பற்றிப் பேசி, எழுதி, நூல் வெளி யிட்டவர் உலகில் வேறு எவரும் இலர் என்றும், ராய் புகழ்ந் துரைத்தார். அப்படியே கான்பூர் சென்று, அகில இந்திய்