பக்கம்:தந்தை பெரியார்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்று, 29, 30, 31 மூன்று நாட்களும் ஆங்கிலத்தில் விளக்கமாக உரை நிகழ்த்தினார் பெரியார். சேலம் மாநாட்டிற்குப் பிறகு திராவிடர் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தினார் பெரி யார். 1945-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் உறுப்பினர் எண் ணிக்கை 24,302 அவர்கள் செலுத்திய கட்டணம் ரூ. 2619-13-0. மாணவர்கள் புத்தெழுச்சியால் மனம் நெகிழ்ந்த பெரியார் எதிர்காலத்தில் இனி அச்சமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி, ஆரிய திராவிடப் போருக்கு அறை கூவல் என்ற குடி அரசு’ 20-1-45 தேதிய இதழில் தலை யங்கமே தீட்டினார். தென்னார்க்காடு மாவட்டம் புதுப் பேட்டையில் திராவிட மாணவர் மாநாடு; சிற்றுாரிலும் வெற்றிகரமாய் நடக்கும் என எடுத்துக் காட்டாய் இலங் கியது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா என்று தொடங்கி, இங்கு உன் நாட்டுக்கு இழி கழுதை ஆட்சியா? என்றெல்லாம் ஒடும் கவிதைப் பிரவாகம், புரட்சிக் கவிஞர் இந்த மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். ஈ. வெ. கி. சம்பத் இம்மாநாட்டின் தலைவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் படிப்போடு நிறுத்திய சம்பத், எல்லா வகை யிலும் பெரியாரின் வாரிசாக விளங்குந் தகுதி பெற் றிருந்தார். பெரியாரும் தத்து எடுத்துக் கொள்ளப் பத்திரங்கள்கூட வாங்கி வைத்திருந்தார். என்ன அவ நம்பிக்கை ஏற்பட்டதோ-பின்னாளில் பெரியாரின் யூகம் சரியானதென நிரூபிக்கப்பட்டது-சம்பத்தைப் பெரியார் தம் வாரிசுப் புதல்வனாக ஏற்றுக் கொள்ள வில்லை. தீர்க்கமான சிந்தனையும் தெளிவான கருத்து ஒட்டமும் வாய்க்கப் பெற்ற சம்பத், சொல்லின் செல்வர் என அன்புடன் அழைக்கப்பட்டார். அண்ணா வின் தனியான கனிவுக்குப் பாத்திரராயிருந்தவர்அதனாலேயே பெரியாராலும் ஒதுக்கப்பட்டவர்என்ன சபலத்துக்கோ ஆட்பட்டார். தி.மு.க. நாடாளு மன்ற உறுப்பினரானவர், தமிழ் தேசியக்கட்சி கண்டார்